search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெசவு தொழிலாளி"

    • பவானிசாகா் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்.
    • அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சாவக்காட்டுபாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜன்(40). நெசவு தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. மோகன்ராஜன் கடந்த 3 மாதமாக பவானிசாகா் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்.

    மோகன்ராஜன் அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தார்.கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் இருந்த மோகன்ராஜன் நேற்று அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோலவண்டியான் வளவு பகுதியில் ஓடும் சரபங்கா நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக, பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
    • தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பிணத்தை மீட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம்,சோலவண்டியான் வளவு பகுதியில் ஓடும் சரபங்கா நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக, பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து வி.ஏ.ஓ ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பிணத்தை மீட்டனர்.

    போலீசார் விசாரணை யில், இறந்தவர் இடங்கணசாலை அருகிலுள்ள பாப்பாப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் சங்கர் (வயது 45), நெசவு தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    உயிரிழந்த சங்கருக்கு, சுலோச்சனா என்ற மனைவியும் , 2 மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சங்கர், கடந்த 21-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பாத நிலையில் நேற்று சரப்பங்கா நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    சங்கர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையில் இறந்தாரா என்பது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சென்னி–மலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் மலை கணுவாய் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது திடீரென மோதியது.
    • இதில் பலத்த காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் அம்மாபாளையம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (58). நெசவுத் தொழிலாளி. இவர் காங்கேயம் அருகில் உள்ள பாப்பினியில் பொங்கல் விழாவிற்கு சென்று விட்டு சென்னிமலைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது சென்னி–மலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் மலை கணுவாய் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது திடீரென மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூர்த்திக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தச் சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×