நெசவு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

பவானிசாகா் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்.அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெசவு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் சாவக்காட்டுபாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜன்(40). நெசவு தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. மோகன்ராஜன் கடந்த 3 மாதமாக பவானிசாகா் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்.

மோகன்ராஜன் அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தார்.கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் இருந்த மோகன்ராஜன் நேற்று அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com