search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிஜ்ஜார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்திய ஏஜென்சிக்கு தொடர்பு என கனடா குற்றச்சாட்டு
    • தூதர்களை வெறியேற்ற இரு நாடுகளும் பரஸ்பர நடவடிக்கை

    காலிஸ்தான் பயங்கரவாதி தலைவர் நிஜ்ஜார், இந்தியாவில் இருந்து வெளியேறி கனடாவில் வசித்து வந்தார். கனடா நாட்டின் குடியுரிமை பெற்றிருந்த அவரை, கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி முகமூடி அணிந்த இருவர் சுட்டுக்கொலை செய்தனர்.

    இந்த கொலையில் இந்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு (Agency) தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற்றவும் கனடா உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் உயர் அதிகாரிகளை வெளியேறும்படி இந்திய பதிலடியாக தெரிவித்தது.

    இதனால் இரண்டு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த விசயத்தை இன்னும் பெரிதாக்க விரும்பவில்லை. இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

    இந்த விவகாரம் அப்படியே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கனடாவின் வெளியுறவுத்துறை மந்திரி மெலனி ஜோலி ஆகியோர் அமெரிக்காவின் வாஷிங்டனில் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கனடா தூதர் அதிகாரிகள் மற்றும் இருநாட்டு ராஜதந்திர உறவுகள் பாதிப்பு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து சுமார் 30 அதிகாரிகளை சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் உள்ள தூதரகத்திற்கு மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 10-ந்தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது.

    கனடாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்று இந்தியா கடுமையாக எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×