search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்ல பாம்பு"

    • பள்ளத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது.
    • நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது. அப்போது அங்கு நல்ல பாம்பு ஒன்று வந்தது.

    அந்த நல்ல பாம்பு நாய் குட்டிகளை பாதுகாத்து வருகிறது. பொதுமக்கள் யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் கம்பீரமாக நாய்க்குட்டிகளின் முன்னால் நின்றது. அப்போது அங்கு வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனால் அந்த நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக நாய் குரைத்துகொண்டு இருந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது நல்ல பாம்பு குட்டிகளை பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பிரமிப்புடன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

    மேலும் இது குறித்து தகவல் அறிந்த கடலூர் வன அலுவலர் செல்லா சம்பவ இடத்திற்கு சென்று அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு பாதுகாப்பாக காட்டில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமச்சந்திரன் வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது.
    • நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் குளத்துப்பாதை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி வெங்கலட்சுமி. இவரது வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு, வெளியே வந்தனர். மேலும் இதுபற்றி சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின் நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே பத்மனாபபுரம் செக்கால தெருவை சேர்ந்தவர் நடராஜபிள்ளை. இவரது வீட்டுக்கு பின்புறம் கோழி கூடு உள்ளது. இன்று காலை கோழி கூட்டை திறக்க சென்ற போது ஒரு கோழி செத்து கிடந்தது. கூண்டு வழியாக பார்த்த போது ஒரு பாம்பு நெளிந்த படி இருந்தது.

    உடனே தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு அலுவலர்ஜீவன்ஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது விஷம் கூடிய 6 அடி நல்ல பாம்பு என தெரியவந்தது. உடனே பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் மைதானம் அருகில் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருந்தது.
    • பாம்பு பிடி வீரரான சஞ்சய், பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் பின்புறம் வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் மைதானம் அருகில் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருந்தது. உடனடியாக பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரரான சஞ்சய், பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சென்றார்.

    பிடிபட்ட பாம்பை பாதுகாப்பாக காப்புக்காட்டில் விடுவதாக கூறி பாம்பு பிடி வீரரான சஞ்சய் எடுத்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    கோவையில் கோவில் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு..!https://t.co/MQ55lEq2AT #Snake #Coimbatore #Maalaimalar #MMNews pic.twitter.com/UeWbEoY2E6

    ×