search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலப்பணி திட்ட முகாம்"

    • ராமநாதபுரம் கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
    • பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என்.பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி மைதானத்தில் மரக்கன்று கள் நடப்பட்டன. தலைவர் சண்முகராஜ்பாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதில் மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். மேலும் நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் மகர நோன்பு திடல், சுடலை மாடன் சுவாமி கோவில் வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • 7நாட்கள் சிறப்பு நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது/
    • சாமளாபுரம் பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் 7நாட்கள் சிறப்பு நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது/

    அதன்படி கடந்த 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாமளாபுரம் பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளானது கோவை இயற்கை கழகத்தின் தலைவர் செல்வராஜ் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சாமளாபுரம் குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பும் ,பின்னர் சாமளாபுரம் பகுதியில் தூய்மைப்பணியும் மேற்கொண்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மழைகாடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.பின்னர் கடந்த 31-10-2022-ந்தேதி (திங்கட்கிழமை) ரோட்டரி சோமனூர் மற்றும் லிட்ரசி பள்ளி நிர்வாகம் இணைந்து சாமளாபுரம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யம்பாளையம்,காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் (6 இடங்களில்) ஆபத்தான வளைவுகளில் குவிகண்ணாடி அமைத்தனர். மேலும் 7 இடங்களில் குவிகண்ணாடி அமைக்கவுள்ளனர்.பின்னர் மாலை 6 மணிக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நீர்மேலாண்மை என்ற தலைப்பில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.

    அதனைத்தொடர்ந்து 1-11-2022-ந்தேதி (திங்கட்கிழமை) சாமளாபுரம் பகுதியில் லிட்ரசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கள்ளப்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு சமுதாய பொறுப்பும் தனிமனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் கா.வி.பழனிச்சாமி லிட்ரசி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து இன்று சாமளாபுரம் பேரூராட்சி க்குட்பட்ட பகுதிகளில் லிட்ரசி பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் வருகிற 4-11-2022-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஆர்.ராமமூர்த்தி, நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

    ×