நாட்டு நலப்பணி திட்ட முகாம்

ராமநாதபுரம் கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என்.பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி மைதானத்தில் மரக்கன்று கள் நடப்பட்டன. தலைவர் சண்முகராஜ்பாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். மேலும் நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் மகர நோன்பு திடல், சுடலை மாடன் சுவாமி கோவில் வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com