search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பாடுவான்கதை"

    • ஒரே ஒரு நாள் பலனை மட்டும் கொடு. உன்னை விட்டு விடுகிறேன் என்றது.
    • நம்பாடுவான் அதற்கும் மறுத்தார். இறுதியில் பிரம்மராட்ச பூதம் கெஞ்சியது.

    அந்த உற்சாகமும் மலர்ச்சியும் பூதத்துக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

    சரி உன்னை விட்டு விடுகிறேன்.

    நீ இதுவரை பாடித்துதித்தாய் அல்லவா. அதன் பலனைக் கொடு உன்னை விடுகிறேன் என்றது பிரம்மராட்ச பூதம்.

    அதை மறுத்து தன்னை சாப்பிடச் சொன்னார் நம்பாடுவான்.

    இதனால் பூதம் மேலும் அதிர்ந்தது.

    ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்? மனிதப் பிறவி கிடைத்தற்கரியது என்பது உனக்குத் தெரியாதா?

    போய் உன் குடும்பத்தோடு சந்தோஷமாக இரு.

    ஒரே ஒரு நாள் பலனை மட்டும் கொடு. உன்னை விட்டு விடுகிறேன் என்றது.

    நம்பாடுவான் அதற்கும் மறுத்தார். இறுதியில் பிரம்மராட்ச பூதம் கெஞ்சியது.

    தயவு செய்து உன் பலனை எனக்கு கொடு.

    அதன் மூலம் என்னுடைய பிரம்மராட்ச கோலம் முடிவுக்கு வரும் என்று நம்பாடுவானிடம் மன்றாடியது.

    அதனால் மனமிரங்கிய நம்பாடுவான். அன்று தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்தான்.

    பிரம்மராட்சஸ் தன்னுடைய வடிவம் நீங்கி, மேலுலகை அடைந்தது.

    இதனால் இந்த ஏகாதசிக்கு "கைசிக ஏகாதசி" என்று பெயர்.

    இன்றும் திருக்குறுங்குடியில் இந்த கைசிக ஏகாதசி விசேஷமாக நடைபெறுகிறது.

    அன்று கைசிக புராண நாடகமும் நடைபெறுகிறது.

    கைசிக ஏகாதசி விரதமிருக்கும் பக்தனுக்கும் சாப நிவர்த்தி செய்யும் ஆற்றல் உண்டாகிறது என்பது இந்த ஏகாதசியின் தனிச்சிறப்பு.

    ×