search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபாதை கடைகள்"

    • வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்தை மீறி சாலையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    சிறுவாபுரியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். கோவிலை சுற்றி உள்ள நடைபாதை, சாலையோர கடைகளால் பக்தர்களுக்கு இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து கோவில் அருகே உள்ள நடைபாதை கடைகளை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது அதிகாரிகள் கூறும்போது, வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்தை மீறி சாலையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. கடை முன்பு வாகனங்கள் நிறுத்தக்கூடாது. புதிய வியாபாரிகள் அனுமதிக்க கூடாது. நடைபாதை வியாபாரிகள் விதிமுறைகளை கடை பிடிக்காவிட்டால் கோவில் அருகே இருபுறத்தில் உள்ள கடைகள் முழுவதும் அகற்றப்படும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இந்த கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    • மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
    • இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் நகரின் மையப் பகுதியான என். ஜி. ஆர்., சாலையில் ஏராளமான வணிக வளாக கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. மேலும் இப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் உள்ளது. அந்த கடைகளை வியாபாரிகள் ஏலம் எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழை,எளியவர்கள் என். ஜி. ஆர். சாலையில் இருபுறமும் தள்ளு வண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நடைபாதை கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அவர்களை நகராட்சி நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தியதை அடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று மார்க்கெட் வியாபாரிகள் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் மற்றும் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தனர். நடைபாதை கடைகளை அகற்றுவதாகவும், அதே நேரம் மார்க்கெட்டினுள் கடை வைத்துள்ளவர்கள் ரோட்டை ஆக்கிரமித்து கடைகளை போடக்கூடாது என அறிவுறுத்தியதாகவும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    ×