search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடும் பணி"

    • திருத்துறைப்பூண்டியில் 1 லட்சம் பனைவிதைகள் நடும் பணி தொடங்க உள்ளது.
    • பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார், முசிறி விதை யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் பணி இந்த வாரம் இறுதியில் (செப்டம்பர்) தொடங்க உள்ளது.

    இதற்காக பனை விதைகள் சேகரிப்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த பணியை சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    பணிகள் முடிந்த பிறகு நெடுஞ்சாலைகள், ஆற்றங்கரைகள், குளம், வாய்க்கால், ஓடை, பள்ளி, கல்லூரி, கோவில் வளாகங்க ளில் பனை விதைகள் நடும்பணி தொடங்கும்.

    இப்பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சேவை அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    இப்பணி முழுக்க மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டபம் அருகே மானாங்குடியில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.

    காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பனை மர விதைகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முஹமது சலாவுதீன், மாவட்ட தலைவர் ராஜ கோபால், துணை தலைவர் பத்ம நாபன், ராமநாதபுரம் நக ராட்சி தலைவர் கார்மே கம், துணை தலைவர் பிர வீன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், இருமேனி ஊராட்சி தலை வர் சிவக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன், ராம நாதபுரம் நகராட்சி கவுன்சி லர் ஜஹாங்கீர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அதைதொடர்ந்து மானாங்குடி ஊராட்சி நாக நாதர்கோவில்- சின்னுடை யார்வலசை வரை ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையை மக்கள் பயன் பாட்டிற்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன், துணை தலைவர் புஷ்பம் மேகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்குமார், உஷா நந்தினி, ரஞ்சிதம், ஜோதி, நித்யா, ஊராட்சி செயலர் கருணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 150 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தாா்.
    • ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் வங்கிகள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் மூலம் அரசுக்கு சொந்தமான இடங்கள், பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.வடிவேல், மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×