search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சுரேஷ்கோபி"

    தேர்தல் விதிமுறைகளை நான் எந்த வகையிலும் மீறவில்லை. எனக்கு பிடித்தமான கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது என்று நடிகர் சுரேஷ்கோபி கூறினார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி தற்போது பா.ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.

    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது சுவாமி ஐயப்பன் பெயரையோ அல்லது வழி பாட்டுத்தலங்களை குறிப்பிட்டோ பிரசாரம் செய்யக் கூடாது என்று மாநில தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியிருந்தார்.

    இந்த நிலையில் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சுரேஷ்கோபி கலந்து கொண்டு பேசினார். அப்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் மக்களின் உணர்வாக உள்ளார். சபரிமலை கோவில் விவகாரத்தில் பக்தர்களின் மனம் புண்பட்டு உள்ளது. அதில் நானும் ஒருவன். ஆனால் இந்த விவகாரத்தை நான் தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்த விரும்பவில்லை என்றார்.

    இது திருச்சூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அனுபமா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தியதால் அதுபற்றி 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி சுரேஷ் கோபிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து நடிகர் சுரேஷ்கோபி கூறியதாவது:

    தேர்தல் விதிமுறைகளை நான் எந்த வகையிலும் மீறவில்லை. சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று அந்த கூட்டத்திலேயே நான் கூறினேன். எனக்கு பிடித்தமான கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. இதற்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். எனக்கு கலெக்டர் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு தகுந்த விளக்கம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    தேர்தல் பிரசாரத்தில் ஐயப்ப சாமி பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்த நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    திருச்சூர்:

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சுரேஷ்கோபி. இவர் பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அந்த கட்சியின் சார்பில் தற்போது திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அவர் களம் இறங்கி உள்ளார்.



    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக திருச்சூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான, அனுபமாவிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு சுரேஷ்கோபிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நடவடிக்கை குறித்து மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா கூறும்போது, “தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரையோ அல்லது வேறு எந்த கடவுளின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆனால் நடிகர் சுரேஷ்கோபி ஐயப்ப சாமி குறித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அவருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது சரியான நடவடிக்கைதான்” என்றார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi

    ×