search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகரசபை அலுவலகத்தில்"

    • குறைந்த அளவிலேயே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    குடிநீர் வினியோகம் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 22-வது வார்டு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார்.

    -இந்தநிலையில் 22-வது வார்டு பகுதியான பெருமாள் லேஅவுட், சாமப்பா லே அவுட், சுமா லேஅவுட் போன்ற பகுதியில் கடந்த 6 மாதங்களாகவே முறையாக குடிநீர் வினியோகம் செய்யாமல் மிகவும் காலதாமதமாகவும், மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயத்தில் அருகில் உள்ள வார்டு பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதாக குற்றம்சாட்டி 22-வது வார்டு மக்கள் தங்கள் பகுதிக்கு அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்

    -2-வது வார்டு உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    -தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்

    அப்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை நிச்சயமாக 3 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி பொறியாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    ×