search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகர சபை கூட்டம்"

    • அ.தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தல்
    • அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

    இதில் திமுகவை சேர்ந்த ஏ.சி மணி என்பவர் நகர மன்ற தலைவராகவும் நகர மன்ற துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த பாரி பாபு என்பவரும் உள்ளிட்ட 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    நேற்று ஆரணி நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டம் நகர மன்றத் தலைவர் ஏ.சி மணி தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அதிமுக கவுன்சிலர் பேசியாதவது : மக்களின் பிரச்சனையை எடுத்துரைப்பதற்கு மாதம் மாதம் நடைபெற வேண்டிய நகர மன்ற கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவதால் மக்களின் பிரச்சினையை நகர மன்ற கூட்டத்தில் முன்வைக்க முடியவில்லை என்று நகர மன்ற உறுப்பினர் குற்றசாட்டினார்

    இதில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் ராஜ விஜய காமராஜ், உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    • நகர சபை கூட்டத்தில் தலைவர் அறிவுறுத்தல்
    • பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவதம் வருமாறு:-

    பொன். ராஜசேகர்:-

    ஆற்காடு நகரில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தீர்கள். சில நாட்களிலேயே அந்தக் கடை மீண்டும் திறக்கப்பட்டன. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். நகராட்சி அதிகாரிகள் வார்டுக்கு சென்று பார்வையிடுவதில்லை.

    சுகாதார ஆய்வாளர் பாஸ்கர்:-

    பிளாஸ்டிக் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதற்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதில்லை என கடை உரிமையாளர் கடிதம் மூலம் எழுதிக் கொடுத்ததின் பேரில் மீண்டும் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ரவிச்சந்திரன்: கடந்த ஒரு வாரமாக என்னுடைய வார்டில் துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. காய்கனி மார்க்கெட்டில் கடையின் மேற்கூரையாக சிமெண்டு சீட்டுதான் போட வேண்டும். ஆனால் இரண்டு கடைகளுக்கு மட்டும் மேல் தளம் போடப்பட்டுள்ளது. யார் அனுமதி அளித்தது.

    ஏற்க முடியாது

    உதயகுமார்:-

    என்னுடைய வாட்டில் தெருக்களில் சேர்ந்துள்ள மண்ணை அகற்றும் படி சென்ற கூட்டத்தில் தெரிவித்து இருந்தேன். இதுவரை அகற்ற வில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் என்பதால் எந்த பணிகளும் செய்வதில்லையா.

    நகர மன்ற தலைவர்

    அனைத்து உறுப்பினர்களையும் ஒரே மாதிரி நினைத்துதான் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள்.

    நகர மன்ற உறுப்பினர்கள் வாட்ஸ் அப்பில் தங்கள் வார்டில் உள்ள குறைகளை பதிவு செய்கிறீர்கள். அதனை ஏற்க முடியாது. முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செல்வம்:-

    எனது வார்டில் புதியதாக குழாய் இணைப்பு வேண்டி மனு கொடுக்கப்பட்டு, டெபாசிட் தொகையும் கட்டப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் பணியை உடனடியாக செய்து தர வேண்டும்.

    துர்நாற்றம்

    லோகேஷ்:-

    வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வைக்கின்றனர். குப்பை வண்டிகள் வராததால் அதை வீட்டிலேயே வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    கீதா சுந்தர்:-

    சீரமைக்கப்பட்ட பூங்காவில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வார்டு உறுப்பினர் எனது பெயர் இல்லை. அதில் நகர மன்ற உறுப்பினர் பெயரை எழுத வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவதாக தலைவர் உறுதி
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் சுஜாதா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வார்டு 1 முதல் 30 வரை உள்ள தெருவிளக்குகளை மின்சார சிக்கன நடவடிக்கையாக எல்.இ.டி விளக்குகளாக மாற்றி அமைக்க மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் 1,835 விளக்குகள் ரூ.262.33 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண். 145, நாள் 14-10-2022 அரசாணை வெளியிட்டுள்ளதை தொடர் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னை அவர்கள் கடிதம் அனுமதி அளித்து வரப்பெற்றுள்ள கடிதம் மன்றத்தின் பார்வைக்கும் வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் 11 வார்டுகளில் பல லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சிறுபாலம் மழை நீர் வடிகால்வாய், நீர்மூழ்கி மின்மோட்டார்கள் கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றுவது என்பது உள்பட 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் தி.மு.க.நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் சுஜாதா வினோத் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • ஆம்பூர் நகர சபை கூட்டத்தில் பரபரப்பு

    ஆம்பூர், ஆக.19-

    ஆம்பூர் நகராட்சி கூட்டம் தலைவர் ஏஜாஸ் அகமது தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    நகராட்சி கூட்டம்

    கூட்டத்தில் பொதுநிதி செலவினங்கள் நிர்வாக மேம்பாடு உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது.

    மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் செய்யவேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

    5-வார்டு திமுக கவுன்சிலர் வசந்தராஜ் பேசுகையில்:- ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் குப்பை காடாக திகழ்கிறது குடிநீர் கலங்கனாக வருகிறது இதனால் பொதுமக்களுக்கு நோய் ஏற்பட்டு வருகிறது.

    தூய்மையை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே ஆம்பூர் பாலாற்றில் குப்பைகளை கொட்டுகிறது என்றார்.

    மலைபோல் குப்பைகள்

    13-வது வார்டு திமுக கவுன்சில் ரமேஷ் பேசுகையில்:- ஆம்பூரில் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் தனி நபர் ஒருவர் நகராட்சி ஆணையாளர் கையொப்பமிட்ட ரசீது வழங்கி சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளார்.

    இதன் மூலம் நகராட்சிக்கு ரூ. 10 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளர் உடனடியாக தலையிட்டு போலி பில் மூலம் வசூல் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    12-வது வார்டு பாஜக கவுன்சில் லட்சுமி பிரபா அன்பு பேசுகையில்:- எனது வார்டில் குப்பைகள் மழல போல் கிடக்கிறது. குப்பைகளை அகற்ற வேண்டும் என்றார்.

    10-வது வார்டு திமுக கவுன்சில் இம்தியாஸ் அகமது பேசுகையில்:- ஹவுசிங் போர்டு பகுதியில் அங்கன்வாடி மையத்தில் சுகாதார சீர்கேடு காரணமாக 2 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது.

    உடனடியாக நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது உறுதி அளித்தார்.

    நகராட்சி ஆணையாளர் ஷகிலா, பொறியாளர் ராஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×