ராணிப்பேட்டை நகர சபை கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவதாக தலைவர் உறுதி கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் சுஜாதா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வார்டு 1 முதல் 30 வரை உள்ள தெருவிளக்குகளை மின்சார சிக்கன நடவடிக்கையாக எல்.இ.டி விளக்குகளாக மாற்றி அமைக்க மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் 1,835 விளக்குகள் ரூ.262.33 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண். 145, நாள் 14-10-2022 அரசாணை வெளியிட்டுள்ளதை தொடர் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னை அவர்கள் கடிதம் அனுமதி அளித்து வரப்பெற்றுள்ள கடிதம் மன்றத்தின் பார்வைக்கும் வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் 11 வார்டுகளில் பல லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சிறுபாலம் மழை நீர் வடிகால்வாய், நீர்மூழ்கி மின்மோட்டார்கள் கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றுவது என்பது உள்பட 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் தி.மு.க.நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்த தலைவர் சுஜாதா வினோத் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com