search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பத்திரிம்"

    • தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி அதிரடி தீர்ப்பு.
    • எஸ்பிஐ வங்கி நன்கொடையாளர்கள் விவரங்களை தேர்தல் ஆணையத்தின் வழங்க உத்தரவு.

    கடந்த மாதம் 15-ந்தேதி தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. அது தொடர்பாக திருத்தப்பட்ட சட்டங்களும் செல்லாது.

    எஸ்பிஐ வங்கிய உடனடியாக தேர்தல் பத்திரம் வினியோகம் பணியை நிறுத்த வேண்டும். கட்சிகளுக்கு நன்கொடையாளர்கள் பணம் அளித்துள்ள விவரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மார்ச் 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    ஆனால், எஸ்பிஐ வங்கி அதற்கு அளிக்கப்பட்ட காலஅவகாசத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை வழங்கவில்லை. மாறாக ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. யாரை காப்பாற்றுவதற்காக என்ற சந்தேகம் கிளம்புவதாக எஸ்பிஐ-க்கு எதிராக விமர்சனம் தெரிவித்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் எஸ்பிஐ வங்கியின் வேண்டுகோள் மனுவை இன்று விசாரிக்கிறது.

    விசாரணை முடிவில் எஸ்பிஐ வங்கிக்கு காலஅவகாசம் கொடுக்குமா? இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்புக்காக கண்டனத்தை தெரிவித்து உடனடியாக விவரங்களை அளிக்க உத்தரவிடுமா? என்பது தெரியவரும்.

    ×