search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேஜஷ்வி யாதவ்"

    • இங்கே ஆங்கிலம் மட்டும் பேசும் மக்கள் இன்று ஐ.டி. நிறுவனங்களில் அதிக அளவில் சம்பளம் பெறுகிறார்கள்.
    • அவர்கள் இந்தி, இந்தி என்று சொல்கிறார்கள். இங்கு யார் கட்டுமான வேலை செய்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்து இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளையும் தர்ம சங்கடத்திற்குள் ஆழ்த்தியது. ஏனென்றால் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் சனாதன தர்மத்தை ஆதரிக்கும் கட்சிகள் என்பதால்தான்.

    இந்த நிலையில் திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான தயாநிதி மாறன் பேசிய ஒரு வீடியோ தற்போது பா.ஜனதா தலைவரால் பகிரப்பட்டள்ளது. அதில் இந்தி படித்தவர்களின் வேலை வாய்ப்பை, ஆங்கிலம் படித்தவர்களின் வேலை வாய்ப்பு உடன் ஒப்பிட்டு பேசியது வெளிப்படுகிறது.

    "இங்கே ஆங்கிலம் மட்டும் பேசும் மக்கள் இன்று ஐ.டி. நிறுவனங்களில் அதிக அளவில் சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் இந்தி, இந்தி என்று சொல்கிறார்கள். இங்கு யார் கட்டுமான வேலை (பில்டிங் கட்டுகிறார்கள்) செய்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    பீகாரில் இந்தி மட்டுமே படித்தவர்கள் தமிழ்நாட்டில் நமக்காக வீடு கட்டுகிறார்கள். சாலைகளை துடைத்து, கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்" போன்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

    இது வடஇந்தியாவில் குறிப்பாக பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்ற நிலையில் இது பழைய வீடியோ, தற்போது பா.ஜனதா வேண்டுமென்றே பரப்பிவிட்டுள்ளனர் என திமுக சார்பில் சொல்லப்படுகிறது.

    மேலும் மிச்சாங் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு நிவாரணத் தொகை கேட்ட நிலையில் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி, பா.ஜனதாவுக்கு பின்விளைவை ஏற்படுத்திய நிலையில் அதை மறைப்பதற்காகவே இந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பீகார் மாநில துணை முதல்வரான தேஜஷ்வி யாவத் கூறுகையில் "இது கண்டிக்கத்தக்கது. எந்த கட்சியாக இருந்தாலும் பிற மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும். நம் நாடு ஒன்றே. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மக்களை நாங்கள் மதிக்கிறோம். அதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

     பீகார் மாநில பா.ஜனதா தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் கூறுகையில் "காங்கிரஸ் மற்றும் திமுக பேச்சு நாட்டை உடைப்பதாக இருக்கிறது. பீகாரில் இருந்து எங்கே வேலைக்கு சென்றாலும், அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.

    சுயமரியாதையுடன் வேலை செய்வது குற்றமல்ல. அவர்கள் மாநில வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சனாதனம் குறித்து பேசினார்கள். தற்போது தொழிலாளர்கள் குறிவைக்கிறார்கள். இது துரதிருஷ்டவசமானது." என்றார்.

     இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள பா.ஜனதா தலைவர் அமித் மால்வியா "தங்கள் கட்சிகளின் நிலைப்பாடு இதுதான? என்பதை ராகுல் காந்தி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் தெளிவுப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×