search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிராஜ் சிங்"

    • மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக மாநில காங்கிரஸ் டெல்லியில் போராட்டம்.
    • சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    மத்திய அரசு வரிப் பகிர்வில் பாரபட்சம் பார்க்கிறது. தென்மாநிலங்களில் அதிக அளவில் வரி வசூல் ஆகும் நிலையில், குறைந்த அளவே ஒதுக்கப்படுகிறது. தென்மாநில வரிகள் வடமாநிலங்களுக்கு செல்கிறது. இதனை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் இணைந்து சித்தராமையான டெல்லி சென்றுள்ளார். அவர் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு போராட்டம் நடத்தும் நிலையில், மத்திய நிதியமைச்சர் கிரிராஜ் சிங், "கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு பொய்யர்களின் அரசு. ராகுல் காந்தில் பாரத் ஜோடி யாத்திரை (நடைபயணம்) மெற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் நாட்டை உடைப்பதற்கான யாத்திரையை செய்து கொண்டிருக்கிறது" என்றார்.

    • பீகாரில் நிதிஷ்குமார் பா.ஜ.க. கூட்டணியில் இணைய போவதாக செய்தி பரவியது.
    • அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைதள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் 2025ம் ஆண்டில் பீகாரில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் பீகாரில் அடுத்த ஆண்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.

    மாநிலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் காணவே இங்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

    • இங்கே ஆங்கிலம் மட்டும் பேசும் மக்கள் இன்று ஐ.டி. நிறுவனங்களில் அதிக அளவில் சம்பளம் பெறுகிறார்கள்.
    • அவர்கள் இந்தி, இந்தி என்று சொல்கிறார்கள். இங்கு யார் கட்டுமான வேலை செய்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்து இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளையும் தர்ம சங்கடத்திற்குள் ஆழ்த்தியது. ஏனென்றால் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் சனாதன தர்மத்தை ஆதரிக்கும் கட்சிகள் என்பதால்தான்.

    இந்த நிலையில் திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான தயாநிதி மாறன் பேசிய ஒரு வீடியோ தற்போது பா.ஜனதா தலைவரால் பகிரப்பட்டள்ளது. அதில் இந்தி படித்தவர்களின் வேலை வாய்ப்பை, ஆங்கிலம் படித்தவர்களின் வேலை வாய்ப்பு உடன் ஒப்பிட்டு பேசியது வெளிப்படுகிறது.

    "இங்கே ஆங்கிலம் மட்டும் பேசும் மக்கள் இன்று ஐ.டி. நிறுவனங்களில் அதிக அளவில் சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் இந்தி, இந்தி என்று சொல்கிறார்கள். இங்கு யார் கட்டுமான வேலை (பில்டிங் கட்டுகிறார்கள்) செய்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    பீகாரில் இந்தி மட்டுமே படித்தவர்கள் தமிழ்நாட்டில் நமக்காக வீடு கட்டுகிறார்கள். சாலைகளை துடைத்து, கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்" போன்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

    இது வடஇந்தியாவில் குறிப்பாக பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்ற நிலையில் இது பழைய வீடியோ, தற்போது பா.ஜனதா வேண்டுமென்றே பரப்பிவிட்டுள்ளனர் என திமுக சார்பில் சொல்லப்படுகிறது.

    மேலும் மிச்சாங் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு நிவாரணத் தொகை கேட்ட நிலையில் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி, பா.ஜனதாவுக்கு பின்விளைவை ஏற்படுத்திய நிலையில் அதை மறைப்பதற்காகவே இந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பீகார் மாநில துணை முதல்வரான தேஜஷ்வி யாவத் கூறுகையில் "இது கண்டிக்கத்தக்கது. எந்த கட்சியாக இருந்தாலும் பிற மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும். நம் நாடு ஒன்றே. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மக்களை நாங்கள் மதிக்கிறோம். அதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

     பீகார் மாநில பா.ஜனதா தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் கூறுகையில் "காங்கிரஸ் மற்றும் திமுக பேச்சு நாட்டை உடைப்பதாக இருக்கிறது. பீகாரில் இருந்து எங்கே வேலைக்கு சென்றாலும், அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.

    சுயமரியாதையுடன் வேலை செய்வது குற்றமல்ல. அவர்கள் மாநில வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சனாதனம் குறித்து பேசினார்கள். தற்போது தொழிலாளர்கள் குறிவைக்கிறார்கள். இது துரதிருஷ்டவசமானது." என்றார்.

     இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள பா.ஜனதா தலைவர் அமித் மால்வியா "தங்கள் கட்சிகளின் நிலைப்பாடு இதுதான? என்பதை ராகுல் காந்தி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் தெளிவுப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பீகாரில் நிதிஷ் குமார்- தேஜஷ்வி யாதவ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • பீகாரின் எதிர்காலம் தேஜஷ்வி யாதவ் தலைமையில் இருப்பதாக லாலு கூறியதாக மத்திய மந்திரி தெரிவித்திருந்தார்.

    பா.ஜனதாவை 2024 மக்களவை தேர்தலில் வீழ்த்தி சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

    அப்போது மம்தா பானர்ஜி மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை தேர்வு செய்வார்கள் என நிதிஷ் குமார் எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தயங்கியதாகவும், அதனால் கூட்டத்தின் பாதிலேயே நிதிஷ் குமார் வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.

    இதனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியா கூட்டணி கரை சேருவது கடினம் எனவும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

    பீகாரில் நிதிஷ் குமார் லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார். லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், லாலு பிரசாத் பயணம் செய்த விமானத்தில் சென்றுள்ளார். அப்போது இருவரும் அரசியல் குறித்து பேசியதாக தெரிகிறது.

    பின்னர் விமான பயணத்தின்போது லாலு பிரசாத் யாதவ் தன்னிடம் "தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் பீகாரின் எதிர்காலம் இருக்கிறது" என நம்புவதாக தெரிவித்தார் என குறிப்பிட்டிருந்தார்.

    ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கு இந்த கருத்து மேலும் அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகனும், துணை முதல்வருமான தேஜஷ்வி யாதவ் "மத்திய அமைச்சர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. தனது தந்தை அவ்வாறு கூறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "கிரிராஜ் சிங் தனது தந்தையின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மட்டன் விருந்து வைக்க விரும்புவதாக தெரிவித்தார்" என்றார்.

    ஐந்து மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ஜனதாவின் தேர்தல் திட்டத்தின்படி, கிரிராஜ் தனது எதிர்கால அரசியல் குறித்து கவலை தெரிவித்ததாக தேஜஷ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    • ஒரு குழந்தை கொள்கையை ஏற்று கொண்டு சீனா முன்னேறியுள்ளது.
    • சட்டத்தைப் பின்பற்றாதவர்களுக்கு அரசு சலுகைகளை வழங்கக் கூடாது.

    ஐ.நா.சபை அறிக்கையின்படி அடுத்த ஆண்டு சீனாவை தாண்டி அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்றி, மதம் அல்லது சமூகத்தை பொருட்படுத்தாமல் அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.

    டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:  நம்மிடம் குறைவான வளங்களே உள்ளதால், மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை அமல்படுத்துவது மிகவும் முக்கியமானது. சீனா ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்தி அதன் மூலம் வளர்ச்சியை அடைந்துள்ளது. 1978ல் இந்தியாவை விட ஜிடிபியில் குறைவாக இருந்த சீனா, ஒரு குழந்தை கொள்கையை ஏற்று கொண்டு, கிட்டத்தட்ட 60 கோடி அளவுக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சி அடைந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

    சீனாவில் நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன, இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறக்கின்றன, நாம் எப்படி சீனாவுடன் போட்டியிட முடியும்?. மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா அவசியம். இந்த மசோதாவை மதம் பாராமல் அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தைப் பின்பற்றாதவர்களுக்கு அரசு சலுகைகள் எதுவும் வழங்கக் கூடாது. அவர்களது வாக்குரிமையும் திரும்பப் பெறப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×