என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஞ்சியை கராச்சியாக மாற்ற விரும்பும் ஹேமந்த் சோரன்: மத்திய மந்திரி தாக்கு
    X

    ராஞ்சியை கராச்சியாக மாற்ற விரும்பும் ஹேமந்த் சோரன்: மத்திய மந்திரி தாக்கு

    • கடந்த 13-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    பாட்னா:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இதையடுத்து, அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளில் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது. நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் மந்திரி ஹேமந்த் சோரனும், காங்கிரசும் தலைநகர் ராஞ்சியை கராச்சியாக மாற்ற விரும்புகின்றனர்.

    அதேபோல் தும்கா, தியோகர் மற்றும் சாஹிப்கஞ்ச் மாவட்டங்களை வங்காளதேசமாக மாற்ற விரும்புகிறார்கள். காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் எங்களைப் பிரிக்க நினைக்கின்றன.

    ஜார்க்கண்டில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, மக்கள் தங்கள் 'பாஹு-பேட்டி'யின் பாதுகாப்பிற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அவர்கள் 'ஓட்டு ஜிஹாத்' பற்றி பேசுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளைப் பிரிப்பதே இவர்களின் அடிப்படை நோக்கம். இதை மக்கள் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.

    Next Story
    ×