search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த ஆண்டு பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய மந்திரி
    X

    அடுத்த ஆண்டு பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய மந்திரி

    • பீகாரில் நிதிஷ்குமார் பா.ஜ.க. கூட்டணியில் இணைய போவதாக செய்தி பரவியது.
    • அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைதள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் 2025ம் ஆண்டில் பீகாரில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் பீகாரில் அடுத்த ஆண்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.

    மாநிலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் காணவே இங்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×