search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய்பட்டணம்"

    • அவர் 21-ந்தேதி இரவே தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    தேங்காய்பட்டணம் அருகே உள்ள தூத்தூரை சேர்ந்த பாஸ்டின், சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவரது படகில் குமரி மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த தொழிலாளர்களும் மீன்பிடி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம்போல் இவரது படகில் 16 தொழிலாளர்கள் கடந்த 21-ந்தேதி மாலை தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுனில் (வயது 41) என்பவர் முதன்முதலாக மீன்பிடித்தொழிலுக்கு சேர்ந்திருந்தார்.படகு மறுநாள் தேங்காய்பட்டணம் கடல் பகுதி 50 நாட் டிங்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டி ருக்கும்போது படகிலிருந்த சுனிலை காணவில்லை. அவர் 21-ந்தேதி இரவே தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் மாயமான சுனிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 நாட்கள் கடலில் தங்கி தேடியும் சுனில் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதனால் மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து படகு ஓட்டுனர் வர்கீஸ் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

    மரைன் சப் - இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து மாயமான மீனவர் சுனிலை தேடி வருகிறார்.கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போராட்டத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு
    • டிரஜ்ஜர் என்ற மணல் உறிஞ்சு எந்திரம் மூலம் தான் மணல் அகற்ற வேண்டும்

    கன்னியாகுமரி:

    தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் என்பவர் பைபர் வள்ளத்தில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த போது வள்ளம் முகத்துவாரத்தில் கவிழ்ந்ததில் பரிதாபமாக பலியானார்.

    துறைமுக முகத்து வாரத்தில் குவிந்துள்ள மண் குவியலை அப்புறப்படுத்தாதது தான் விப த்துக்கு காரணம் என்ற குற்றசாட்டுகளை முன் வைத்து தூத்துர், இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துறைமுகத்தைச் சுற்றி யுள்ள சிறு, சிறு கடைகள் உட்பட அனைத்து கடை களும் அடைக்கப்ப ட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக மணல் அள்ளும் எந்திரத்தை இறக்கியது. இந்த எந்திரம் மீனவர்களை ஏமாற்ற கண்துடைப்புக்காக இறக்கப்பட்டதாகவும், டிர ஜ்ஜர் என்ற மணல் உறிஞ்சு எந்திரம் மூலம் தான் மணல் அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) முதல் மீன் பிடிக்க செல்வதில்லை எனவும், மணல் அள்ளும் வரை மீன்பிடி துறைமுகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. ஆனால் தடையையும் மீறி இன்று காலையில் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த மீன் விற்பனை சங்கம், மீன் வியாபாரிகள் சங்கம், மீன் வணிகர்கள் சங்கம், ஐஸ் வியாபாரிகள் சங்கம், டீசல் வியாபாரிகள் சங்கம் போன்றவை இணைந்து மீன்பிடி துறைமுகத்தில் தொடர் ஆர்ப்பாட்ட போராட்டம் துவங்கினர்.

    தூத்தூர் மீன் விற்பனையாளர் சங்க தலைவர் லியோ ஸ்டோன்ஸ்டாய் தலைமை வகித்தார். தேங்கா பட்டணம் துறைமுக வணிகர் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திர ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில், பங்கு பணியாளர் ஜாண்பிரிட்டோ கலந்து கொண்டனர்.

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண் உட்பட பல்வேறு மீனவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் மீனவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×