search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்கள் கூட்டம்"

    • 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அந்த குழந்தையை சூழ்ந்து கொண்டு கடிக்க முற்பட்டது.
    • நாயிடம் கடிபட்டவர்களின் எண்ணிக்கையை விட அதற்கு பயந்து ஓடும் போது கீழே விழுந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது .

    குனியமுத்தூர்.

    கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சியில் வெங்கடாஜலபதி நகர், திருமறை நகர் மற்றும் போத்தனூர் ரோடு போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வீட்டை விட்டு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை தொடர்ந்து நாய்கள் துரத்தி வருகிறது. இதனால் குழந்தைகள் தலை தெறிக்க ஓடி பயத்தில் கீழே விழுந்து எழும் நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துகிறது.

    நேற்று மாலை திருமறை நகரில் கணேசன் என்பவரின் 3 வயது குழந்தை வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அந்த குழந்தையை சூழ்ந்து கொண்டு கடிக்க முற்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஆங்காங்கே இருக்கும் பெரியவர்கள் உடனே வந்து தெரு நாய்களை துரத்தி விட்டு குழந்தையை காப்பாற்றினார்கள்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    தெரு நாய்கள் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக ஊளையிட்டு வருகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களை வெளியே நடை பயிற்சிக்கு அழைத்துக் கொண்டு செல்லும் போது கூட தெரு நாய் கூட்டம் சுற்றி வளைத்துக் கொண்டு குறைத்து வருகிறது. அந்த நாய்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அனேகமான நபர்களை நாய்கள் கடித்து இருக்கிறது. நாயிடம் கடிபட்டவர்களின் எண்ணிக்கையை விட அதற்கு பயந்து ஓடும் போது கீழே விழுந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது .

    பெரியவர்களே நாயை கண்டு பயந்து போய் ஓடும் சூழலை இருக்கும்போது சிறிய குழந்தைகள் என்ன செய்ய முடியும். எங்கள் பகுதி மட்டுமல்ல கோவையில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கோவை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×