search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்திருப்பேரை"

    • கொடை விழா கடந்த 22-ந் தேதி வெள்ளிக்கிழமைகால் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
    • கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை யோகீஸ்வரர் சமுதாயத் திற்கு பாத்தியப்பட்ட அச்சுதடி மாடசுவாமி கோவில் கொடை விழா இன்று இரவு நடைபெறுகிறது. கொடை விழாவை முன்னிட்டு கடந்த 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கால் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

    தீர்த்தம் எடுத்து வருதல்

    28-ந் தேதி தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு கும்பம் ஏற்றி குடி அழைப்பு நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5மணிக்கு சிவனணைந்த பெருமாள் கொடை விழா, மதியம் 11 மணிக்கு சுவாமியாடிகள் தாமிரபரணி நதி நீராடி வருதல், மஞ்சள் நீராடுதல், அதைத்தொடர்ந்து 1மணியளவில் மதிய கொடை விழா நடைபெற்றது. மாலை 5மணிக்கு சுவாமி மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடைவிழா

    இரவு 10:30 மணிக்கு அச்சுதடிமாட சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 1 மணிக்கு சுவாமிக்கு புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனையுடன் சாமகொடை விழா நடைபெறுகிறது. கொடைவிழாவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ் வரம், நையாண்டி மேளம், வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை மதியம் இரவு மூன்று வேளையும் பக்தர்கள், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை யோகீஸ்வரர் சமுதாயத் திற்கு பாத்தியப்பட்ட விழா கமிட்டியார் செய்திருந்தனர்.

    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார்.
    • தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது மற்றும் தொழில் பயிற்சி வழங்குவது சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு முன்னிலை வகித்தார்.

    தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது பற்றியும் தொழில் பயிற்சி வழங்குவது பற்றியும் பேசினார்.

    மேலும் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் மகளிர் சுய உதவி குழு மூலம் தொழில் தொடங்கி மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றியும் பயிற்சி வழங்கினார்.

    மேலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்க்கவும் மஞ்சள் பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் 18 மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், மாரியம்மாள், சீதாலெட்சுமி மற்றும் மகளிர் சமுதாய வழ பயிற்றுனர்கள் உமா மகேஸ்வரி, சந்திரலேகா, சுபா ராஜேஸ்வரி, மேரி ஆனந்த பாஸ்கலின், விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூலான் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூர் கிராமத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் - நெல்லை மெயின் ரோட்டில் திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு குருகாட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூலான் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஸ் குமார், குருகாட்டூர் ஜாலிபிரன்ட்ஸ் தலைவர்ராஜன், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் சுதன் மற்றும் கிறிஸ்தவ பிரமுகர்களும் மத வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.

    சுமார் 25 வருடங்களாக இப்பணியை திறம்பட செய்து வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூலானை ஊர்மக்கள் பாராட்டினர்.

    ×