search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அச்சுதடி மாடசுவாமி"

    • கொடை விழா கடந்த 22-ந் தேதி வெள்ளிக்கிழமைகால் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
    • கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை யோகீஸ்வரர் சமுதாயத் திற்கு பாத்தியப்பட்ட அச்சுதடி மாடசுவாமி கோவில் கொடை விழா இன்று இரவு நடைபெறுகிறது. கொடை விழாவை முன்னிட்டு கடந்த 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கால் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

    தீர்த்தம் எடுத்து வருதல்

    28-ந் தேதி தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு கும்பம் ஏற்றி குடி அழைப்பு நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5மணிக்கு சிவனணைந்த பெருமாள் கொடை விழா, மதியம் 11 மணிக்கு சுவாமியாடிகள் தாமிரபரணி நதி நீராடி வருதல், மஞ்சள் நீராடுதல், அதைத்தொடர்ந்து 1மணியளவில் மதிய கொடை விழா நடைபெற்றது. மாலை 5மணிக்கு சுவாமி மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடைவிழா

    இரவு 10:30 மணிக்கு அச்சுதடிமாட சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 1 மணிக்கு சுவாமிக்கு புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனையுடன் சாமகொடை விழா நடைபெறுகிறது. கொடைவிழாவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ் வரம், நையாண்டி மேளம், வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை மதியம் இரவு மூன்று வேளையும் பக்தர்கள், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை யோகீஸ்வரர் சமுதாயத் திற்கு பாத்தியப்பட்ட விழா கமிட்டியார் செய்திருந்தனர்.

    ×