தென்திருப்பேரையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழில் பயிற்சி

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மகளிர் சுய உதவி குழுவினருக்கு மஞ்சள் பை வழங்கிய காட்சி.
பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மகளிர் சுய உதவி குழுவினருக்கு மஞ்சள் பை வழங்கிய காட்சி.
Published on

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது மற்றும் தொழில் பயிற்சி வழங்குவது சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது பற்றியும் தொழில் பயிற்சி வழங்குவது பற்றியும் பேசினார்.

மேலும் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் மகளிர் சுய உதவி குழு மூலம் தொழில் தொடங்கி மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றியும் பயிற்சி வழங்கினார்.

மேலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்க்கவும் மஞ்சள் பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் 18 மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், மாரியம்மாள், சீதாலெட்சுமி மற்றும் மகளிர் சமுதாய வழ பயிற்றுனர்கள் உமா மகேஸ்வரி, சந்திரலேகா, சுபா ராஜேஸ்வரி, மேரி ஆனந்த பாஸ்கலின், விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com