search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiShooting
    மதுரை:

    தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்த முன்வந்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு சம்பவம் தொடர்பாக, டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் என முத்து அமுதநாதன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த இரு வழக்குகளையும் இன்று நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது, பதில் மனுவுக்கு பதிலாக அரசுத்தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? என்பது தொடர்பான விரிவான அறிக்கையை வருகிற 6-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். #ThoothukudiShooting 
    ×