search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிசூடு"

    • பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது.
    • ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன் மீதான வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளார். வழக்கை திரும்ப பெற முடியாது என்று அப்பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.

    இதனால் கோபமடைந்த ராஜேந்திர யாதவ் தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து, தனது சகோதரருடன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டும் அவரையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    விவரம் அறிந்த காவல்துறையினர், ஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். ராஜேந்திர யாதவ் இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில் காயமடைந்த அப்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சகோதரருக்கும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜேந்திர யாதவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது. மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை அவரது உயிரை காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஏஎஸ்ஐயை சஸ்பெண்ட் செய்வது போதாது, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

    • சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 175 குடும்பங்கள் ரோவாங்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
    • துப்பாக்கி சூடு எதிரொலியால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தஞ்சமடைந்தனர்.

    வங்காளதேசம், டாக்கா பந்தர்பானில் உள்ள ரோவாங்க்சாரி உபாசிலாவில் நேற்று இரவு இரு ஆயுத பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி (ஜனநாயக) மற்றும் குகி- சின் தேசிய முன்னணியின் ராணுவப் பிரிவான குக்கி- சின் தேசிய ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    சம்பவ இடத்தில் இருந்து குண்டுகள் துளைத்த உடல்கள் பந்தர்பன் ஜிலா சதார் மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன என்றும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ரோவாங்ச்சாரி காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி அப்துல் மன்னன் கூறினார்.

    வியாழன் மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    வியாழக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 175 குடும்பங்கள் ரோவாங்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

    துப்பாக்கி சூடு எதிரொலியால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பலர் அருகிலுள்ள கல்வி நிறுவனங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் சிலர் சுரங்க தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர்.
    • உயிரிழந்த 9 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பாங்குய்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பாம்பாரி நகரில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சுரங்க தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர். கண்இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உயிரிழந்த 9 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

    அதே சமயம் இந்த நாச வேலையின் பின்னணியில் ரஷியாவை சேர்ந்த கூலிப்படை உள்ளதாக பாம்பாரி நகர போலீசார் குற்றம் சாட்டினர்.

    இதனிடையே தங்க சுரங்கத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 சீனர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென தனது குடிமக்களை சீன அறிவுறுத்தியுள்ளது.

    • மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    சிவாடட் யுரேஸ்:

    மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று வழக்கம் போல சிறைச்சாலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிறைச்சாலைக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கைதிகள் மற்றும் போலீசார் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.

    இந்த சம்பவத்தில் 10 பாதுகாப்பு படை போலீசார் மற்றும் 4 கைதிகள் உயிர் இழந்தனர். 13 பேர் குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் எதற்காக இந்த தாக்குதல் நடத்தினார்கள் என்றும் தெரியவில்லை. அவர்களை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

    துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    துப்பாக்கி சூடு நடந்த மெக்சிகோ சிறையில் அடிக்கடி கைதிகள் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 11 பேர் பலி யானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹிஜாப் போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது.
    • போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல்.

    இசே:

    ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.

    இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஈரானில் நடைபெற்று வரும், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின. முன்னதாக நேற்று பிற்பகுதியில் இசே நகரின் பல்வேறு பகுதிகளில் கூறிய ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.காவல்துறையினர் மீது அவர்களை கற்களை வீசினர்.

    போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. முன்னதாக கடந்த மாதம் ஒரு புனித ஸ்தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    ×