அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

வர்ஜீனியாவில் உள்ள ஸ்பாட்சில்வேனியா கவுண்டி பகுதியில் சம்பவம் நடந்தது.காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு
Published on

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஸ்பாட்சில்வேனியா கவுண்டி பகுதியில் உள்ள ஒரு கட்டிட வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதில் 3 பேர் பலியானார்கள். மேலும் மூவர் காயமடைந்தனர். அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்தாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com