search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமபுரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாடியில் இருந்து பால்கனி வழியாக பீரோவை கயிறு கட்டி இறக்கி கொண்டு இருந்தனர்.
    • மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 3 பேரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தருமபுரி சந்தைபேட்டை ரோடு நகராட்சி பள்ளி எதிரே வசித்து வந்தவர் பச்சையப்பன் என்கிற குட்டி (வயது50). இவரது வீட்டின் மேல் மாடியில் இலியாஸ் (70) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் இலியாஸ் வேறு வீட்டிற்கு குடியேற முடிவு செய்தார். இதனால் அவர் இன்று காலை வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.

    பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை மாற்றுவதற்காக டெம்போ வேனை வாடகைக்கு அழைத்துள்ளார். அந்த வேன் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளனர்.

    அந்த பொருட்களை வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன், ஆத்துமேடு பகுதியை சேர்ந்த டிரைவர் கோபி (23), மேலக்கார தெருவை சேர்ந்த தாமரைக் கண்ணன் மகன் குமார் (23). இலியாஸ் ஆகியோர் டெம்போவில் ஏற்றி கொண்டிருந்தனர். மாடியில் இருந்து பால்கனி வழியாக பீரோவை கயிறு கட்டி இறக்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது வீட்டின் முன்பு உயர்மின் கம்பி சென்ற நிலையில் எதிர்பாராதவிதமாக பீரோ அந்த கம்பி மீது உரசியது. இதனால் தீப்பொறி கிளம்பியது. பீரோவை இறக்கி கொண்டிருந்த இலியாஸ் உள்பட 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டிலும் தீ பரவியது.

    மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டதில் பச்சையப்பன், கோபி, இலியாஸ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். குமார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இது பற்றி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 3 பேரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ×