search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூழ் செய்திகள்"

    ஆர்.டி.ஓ., தலைமையிலும் முகாம்கள் நடத்த வருவாய்த்துறை முதன்மை செயலர் சித்திக் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வகை குறைகேட்பு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இயல்புநிலை திரும்பிய பின் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வருவாய் நிர்வாக கமிஷனர் தலைமையில், மாநில அளவிலான குறைகேட்பு முகாம் தவிர, இரு மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையிலும், மாதம் ஒருமுறை ஆர்.டி.ஓ., தலைமையிலும் முகாம்கள் நடத்த வருவாய்த்துறை முதன்மை செயலர் சித்திக் உத்தரவிட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து குறைகேட்பு நடத்தப்படும்என்றனர்.

    பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, அனுஷம் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் ஒளிரச் செய்யப்படுகின்றன.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியின் நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் ரூ. 48.87 கோடி நிதி ஒதுக்கீட்டில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக நகரில் திருப்பூர் ரோடு, தளி ரோடு, எலையமுத்தூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டின் மையத்தடுப்புகளில் இரு புறமும் ஒளிரும் வகையில், தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், 5.91 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, அனுஷம் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் ஒளிரச் செய்யப்படுகின்றன. அதேநேரம், தாராபுரம் ரோட்டில் மின் கம்பங்கள் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டாலும் அதற்கான தொகை மின்வாரியத்திற்கு செலுத்தப்படாமல் இருந்தது.

    நீண்ட இழுபறிக்குப்பின் சமீபத்தில்அதற்கான தொகை நகராட்சியால் மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள மின் விளக்குகள் ஒளிர உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், உரிய தொகை செலுத்தப்பட்டுள்ளதால் மின் இணைப்பு வழங்கி மின் விளக்குகள் ஒளிரச்செய்யப்படும்என்றனர்.

    வல்லுனர் குழுவினர் கழிவு உப்பு அப்புறப்படுத்தும் சிறந்த வழிமுறைகள் குறித்து ஆராய்ச்சிகளை துவக்கியுள்ளனர்.

    திருப்பூர்:

    நாட்டின் பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில் சாயக்கழிவு நீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கும் 18 பொது சுத்திகரிப்பு மையங்கள், 100 தனியார் சாய ஆலையுடன் கூடிய சுத்திகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    சுத்திகரிப்பின் இறுதி நிலையில் கழிவு உப்பு வெளியேறுகிறது. இவற்றை அப்புறப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் கண்டறியப்படாததால் சுத்திகரிப்பு மையங்களிலேயே கழிவு உப்பு தேக்கி வைக்கப்படுகிறது.

    மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தேங்கியுள்ள கழிவு உப்புகளை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் கண்டறிய மத்திய தோல் ஆராய்ச்சி பயிற்சி மைய விஞ்ஞானி சண்முகம் தலைமையில் வல்லுனர்கள் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-

    கழிவு உப்பு தேக்கத்தால் திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துவருகின்றன. உப்பை பாதுகாக்க தனியே செலவிட வேண்டியுள்ளது. பெருமளவு இடத்தை கழிவு உப்பு ஆக்கிரமித்துக் கொள்கிறது. சுத்திகரிப்பு மையங்களில், வேறு விரிவாக்க பணி மேற்கொள்ள முடிவதில்லை.

    அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவினர் கழிவு உப்பு அப்புறப்படுத்தும் சிறந்த வழிமுறைகள் குறித்து ஆராய்ச்சிகளை துவக்கியுள்ளனர். திருப்பூர் சுத்திகரிப்பு மையங்களில் தேங்கியுள்ள 45 ஆயிரம் டன் கழிவு உப்பு விரைந்து அகற்றப்படும். 10 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×