search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக உண்ணாவிரதம்"

    • மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    செங்கல்பட்டு:

    நீட்தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வை தொடர்ந்து திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதே போல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தை மாவட்டக் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

    இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் பிரபு, மருத்துவ அணி அமைப்பாளர் செந்தில் குமார் வரவேற்றனர்.

    இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, க.செல்வம் எம்.பி., மீ.அ.வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் து.மூர்த்தி, விசுவநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆ.மனோகரன், செம்பருத்தி, துர்கேஷ், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உண்ணாவிரதத்தில் செல்வம் எம்.பி., எஸ்.எஸ்.பாலாஜி, பகுதி செயலாளர்கள் ஜோசப் அண்ணாதுரை, வந்தே மாதரம், பம்மல் வே.கருணாநிதி, ஏ.கே.கருணாகரன், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருவள்ளூர் ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர், கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன், திருத்தணி எஸ். சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஏ.முரளி சேனா, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆ.சாம் ஜெபராஜ் ஆகியோர் வரவேற்றனர்

    இதில் மாநில இளைஞரணி செயலாளர் பிரபு கஜேந்திரன், மாநில மாணவரணி அமைப்பாளர் பூவை ஜெரால்ட், எழுத்தாளர் மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாநில நெசவாளர் அணி துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிட பக்தன், டாக்டர்.வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், எம்.மிதுன் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், வி.கிஷோர், மு.சுப்பிரமணி, ராஜேஸ்வரி ரவீந்திரநாத் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் த.மோதிலால், டி.கே.பாபு டி.ஆர்.திலீபன், மா.புவனேஷ் குமார் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவரணி, மருத்து வரணி சார்பில் காஞ்சிபுரம் பெரியார்தூண் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்.பி க.செல்வம், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் மாலிக், மருத்துவர் அணி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பொருளாளர், சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி, ஏ.வி சுரேஷ்குமார், மாநகர அவைத் தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர் முத்து செல்வன், ஜெகநாதன், பகுதி செயலாளர் கே, சந்துரு, திலகர், தசரதன்,வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், ஒன்றிய செயலாளர்பி. எம்.குமார், சேகர், ஞானசேகரன், குமணன் ,படுநெல்லி பாபு தொ.மு.ச. கே.ஏ. இளங்கோவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.
    • உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சென்னை:

    தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 20-ந் தேதி தி.மு.க சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.

    அதுசமயம் நமது தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தையும் போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் எம்.எம்.ஆர்.மதன் கூறியுள்ளார்.

    ×