என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் பங்கேற்கும்- மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் அறிவிப்பு
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.
- உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை:
தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 20-ந் தேதி தி.மு.க சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.
அதுசமயம் நமது தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தையும் போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் எம்.எம்.ஆர்.மதன் கூறியுள்ளார்.
Next Story






