search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்ட பயன்கள்"

    • அனைத்து திட்டங்களின் பயனை மக்கள் உரிய முறையில் பெற வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதரக்குடி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையல் அறை கட்டிடத்தினை திறந்து வைத்தார். கலெக்டர் ஆஷா அஜீத் உடனிருந்தார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    முத்தமிழறிஞர் டாக்டர்.கருணாநிதி வழியில், தமிழ கத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர், அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை மாவட்ட கிராமங்களில் அடிப்படை தேவைகள் அதிகரித்து வருகிறது. அதன் தேவை களை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சரால் செயல் படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே அந்த திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படை யானதாகும். எனவே, தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர் மருதுபாண்டியன், ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டிமீனாள் (பாதரக்குடி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×