search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாலிபறிப்பு"

    • ராதா (35), என்பவர் தோப்பில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தபோது,சுமார் 25 வயது மதிக்கதக்க ஒரு நபர் வந்தார்.
    • அந்த நபர் ராதாவை பின் பக்கமாக சென்று அவரது வாயை பொத்தி தாலி செயினை கழற்றி கொடு. இல்லைஎன்றால் உன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கொஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் ராதா (35), இவர் கடந்த 2022-ம்ஆண்டு ஜூலை மாதம்28-ந தேதி காடாம்புலியூர் மாயா கார்டனில் ரவிபலா தோப்பில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தார்.அப்போது சுமார் 25 வயது மதிக்கதக்க கருப்பு நிற பனியன் மற்றும் மஞ்சள் நிற அரைக்கால் சட்டையுடன் வந்த வாலிபர் ஒருவர் இவரிடம் இந்ததென்னை மரம் யாருடையது அவர் போன் நம்பர் தெரியுமா? என்று கேட்டுள்ளார். எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்த மோட்டார் கொட்டகையில் தூங்காமல் படுத்திருந்தார். அப்போது அந்த நபர் ராதாவை பின் பக்கமாக சென்று அவரது வாயை பொத்தி தாலி செயினை கழற்றி கொடு. இல்லைஎன்றால் உன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான். அதற்கு பயந்துகொண்டு சத்தம் போட முடியாமல் இருந்தபோது உடனே அவரது கழுத்தில் கிடந்த தாலி செயினை அவன் எடுக்கும் போது அதை கையால் பிடித்துக் கொண்டார். அதில் பாதி தாலி செயின் இவர் கையில் இருந்தது. மீதியை அவன் எடுத்து சென்று விட்டான். ராதாவின் செல் போனை யும் எடுத்துக்கொண்டு முந்திரி தோப்புக்குள் புகுந்து ஓடிவிட்டான், இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை பறித்து சென்றது காடாம்புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து நகைகளை மீட்டனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நகையை பறித்த பிரகாசுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    ×