search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை செய்து கொண்ட"

    • செந்தில்குமார் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • திடீரென செந்தில்குமார் ரெயில் முன் பாய்ந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த வெள்ளாள பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஒரிச்சேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக செந்தில்குமார் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்த செந்தில் குமார் சம்பவத்தன்று மதியம் தனது பெரியம்மா மகள் ரம்யாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    பின்னர் செந்தில்குமார் நேராக தொட்டிபாளையம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சகாப்தி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென செந்தில்குமார் ரெயில் முன் பாய்ந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் அல்லது பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வினோத்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • தற்கொலைக்கு நானே காரணம் என்று உருக்கமாக எழுதி உள்ளார்.

    நம்பியூர்:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42). இவரது மனைவி சுசித்ரா. ஈரோடு மா வட்டம் நம்பியூர் அருகே உள்ள புதுசூரிபாளையம் பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வினோத்குமார் ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் நம்பியூர் காந்திபுரம் வடக்கு வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்நிலையில் வினோத்குமார் மனைவியை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு அவர் மட்டும் தனியாக நம்பியூர் வந்தார்.

    இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தெரிய வந்ததும் நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு வினோத்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடல் அழுகி இருந்தது.

    அவரது வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள். நான் சரியான முறையில் குடும்பம் நடத்தவில்லை.

    எனக்கு அதிக அளவில் கடன் உள்ளது. சுசியை எதுவும் சொல்லாதீர்கள். எனது தற்கொலைக்கு நானே காரணம். எனது கடன்களை எப்படியாவது அடைத்து விடலாம் என்று 3 மாதங்களாக போராடினேன்.

    ஆனால் மேற்கொண்டு அதிகளவில் கடனாளியாக மாறி விட்டேன். இனிமேல் என்னால் வாழ முடியாது. எனது கடன்களை என்னால் அடைக்க ஒரு வழியும் எனக்கு தோன்றவில்லை.

    என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு உரிய காலத்தில் கடனை செலுத்த முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். எனது தற்கொலைக்கு நானே காரணம் என்று உருக்கமாக எழுதி உள்ளார். கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×