search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிட்டர் உருக்கமான கடிதம்"

    • வினோத்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • தற்கொலைக்கு நானே காரணம் என்று உருக்கமாக எழுதி உள்ளார்.

    நம்பியூர்:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42). இவரது மனைவி சுசித்ரா. ஈரோடு மா வட்டம் நம்பியூர் அருகே உள்ள புதுசூரிபாளையம் பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வினோத்குமார் ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் நம்பியூர் காந்திபுரம் வடக்கு வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்நிலையில் வினோத்குமார் மனைவியை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு அவர் மட்டும் தனியாக நம்பியூர் வந்தார்.

    இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தெரிய வந்ததும் நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு வினோத்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடல் அழுகி இருந்தது.

    அவரது வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள். நான் சரியான முறையில் குடும்பம் நடத்தவில்லை.

    எனக்கு அதிக அளவில் கடன் உள்ளது. சுசியை எதுவும் சொல்லாதீர்கள். எனது தற்கொலைக்கு நானே காரணம். எனது கடன்களை எப்படியாவது அடைத்து விடலாம் என்று 3 மாதங்களாக போராடினேன்.

    ஆனால் மேற்கொண்டு அதிகளவில் கடனாளியாக மாறி விட்டேன். இனிமேல் என்னால் வாழ முடியாது. எனது கடன்களை என்னால் அடைக்க ஒரு வழியும் எனக்கு தோன்றவில்லை.

    என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு உரிய காலத்தில் கடனை செலுத்த முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். எனது தற்கொலைக்கு நானே காரணம் என்று உருக்கமாக எழுதி உள்ளார். கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×