search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு"

    சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது. #TNFishermen
    மனாமா:

    பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேர் சவுதி கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சவுதி அரேபியா கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த மீனவர்களை கைது செய்தனர். #TNFishermen
    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் மற்றும் அவர்களது இரு படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. #TNFishermen #SriLankanNavy
    புதுக்கோட்டை: 

    இந்தியா - இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. 

    அந்த வகையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் மற்றும் அவர்களது இரு படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    முன்னதாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், இரு வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SriLankanNavy

    ×