search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி சைலேந்திரபாபு"

    • டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார்.
    • கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    கோவை:

    கோவையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நடந்தது.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு விரைந்து வந்தார். சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்குமாறும், விசாரணையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து போலீசார் துரித விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடையதாக 6 பேரை கைது செய்தனர். மேலும் வெடி மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றினர்.

    மேலும் அசம்பவாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகளையும் டி.ஜிபி. வழங்கினார்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகளும் இந்த வழக்கு சம்பந்தமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார். கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

    மேலும் கோவையில் சில இளைஞர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்வார் என போலீசார் தெரிவித்தனர்.

    • கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
    • அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கிரிவலப்பாதையில் ஓடினார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து நேற்று 2-வது நாளாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

    முன்னதாக அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அவர் கிரிவலப்பாதையில் ஓடினார். சாதாரணமாக பக்தர்கள் நடந்து சென்றால் கிரிவலப்பாதையை சுற்றிமுடிக்க குறைந்தது 3 மணிநேரம் ஆகும். ஆனால் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒரு மணி நேரம் 52 நிமிடத்தில் ஓடி முடித்து உள்ளார்.

    இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அதில் காவல்துறையில் இன்னும் வேகமாக ஓடுபவர்கள் உள்ளனர் என்றும் பதிவிட்டு இருந்தார்.

    • ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணக்கமாக ஆய்வு செய்து வருகிறோம்.
    • நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் "சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

    சைபர் கிரைம் மோசடிக்கு ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் கிரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். எந்த ஒரு வங்கியும் ஓ.டி.பி. எண்ணை கேட்பது கிடையாது. எனவே ஓ.டி.பி. எண்ணை யாராவது கேட்டால் பகிரக்கூடாது இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது.

    எனவே ஆசைவார்த்தை கூறுபவர்களின் உண்மைத்தன்மை அறிந்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக 46 காவல் நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அளித்த பேட்டி வருமாறு:- 

    சென்னை பல்கலைக்கழகத்தில் சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடம் செல்போன் உள்ளது. இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது.

    எனவே உலகத்தில் உள்ள எந்த நபரும் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். வெளிநாட்டில் போதைப்பொருள் ஏற்றுமதி செய்தது தொடர்பாக உங்களது வங்கிக்கு பணம் வந்துள்ளது என்றோ உங்களுடைய ஆதார் எண் கொடுங்கள் என்றோ உங்கள் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்யலாம்.

    தற்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை. எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி நாங்கள் அனுப்புகிற லிங்கில் பத்து ரூபாய் செலுத்துங்கள். உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது என்று கூறுவார்கள். மின் இணைப்பை மீண்டும் பெற நாம் அவர்கள் கொடுத்த லிங்கிற்கு பத்து ரூபாய் அனுப்பினால் நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள்.

    அதுபோல் உயர் கலெக்டர், டி.ஜி.பி. பேசுவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. நம்மை ஏமாற்றுபவர்கள் வெளிநாட்டில் இருக்கலாம். சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு புகார் கொடுக்கலாம்.

    பிரதமர் வருகையின்போது பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணக்கமாக ஆய்வு செய்து வருகிறோம்.

    செயல்படாத உபகரணங்கள் இருந்தால் மாற்று உபகரணங்கள் வாங்கும் பழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. அதை தவறாமல் செய்து வருகிறோம். தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தரமான உபகரணங்கள் உள்ளன.

    தற்போது கூட நமது காவல்துறையைச் சேர்ந்த 2 குழுவினர் மோப்ப நாய்களுடன் அந்தமான் சென்றுள்ளனர். அங்கிருந்து விமானத்தில் திரும்ப உள்ளனர். இதே போன்று கேரளாவுக்கும் சென்றுள்ளனர்.

    இப்படி வெளி மாநிலங்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நாம் வழங்கி வருகிறோம். எனவே அதில் எந்த குளறுபடிகளுமே இல்லை. பழையதை மாற்றி விட்டு புதியன வாங்குவது வழக்கமாக மேற்கொள்ளப்படுவது தான். நம்மிடம் இருப்பது பழைய டெக்னாலஜி எல்லாம் கிடையாது. வெளி மாநிலத்தவர்களும் பாதுகாப்பு உபகரணங்களை கேட்டு வாங்குகிறார்கள். பழைய டெக்னாலஜி என்றால் அவர்கள் வாங்க மாட்டார்கள்.

    நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. அதில் எதை பயன்படுத்த வேண்டும், எதனை களைய வேண்டும் என்கிற விதி உள்ளது. அதைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

    பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக எஸ்.பி.ஜி.யிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

    என்.ஐ.ஏ.விடம் ஏற்கனவே 15 வழக்குகள் உள்ளன. அது தொடர்பான உதவிகள், தகவல்கள் பரிமாற்றங்களை மேற்கொள்ளவே என்.ஐ.ஏ. ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்கள் தரப்பிலும், நமது காவல்துறை தரப்பிலும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    நமது ஊரில் உள்ள அப்பாவி இளைஞர்களின் செல்போனை பயன்படுத்தியும் வெளிநாட்டினர் சைபர் குற்றங்களில் ஈடுபடுவார்கள். எனவே இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலை செய்யும்போது அதிக குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான கேள்விக்கு வட மாநிலத்தவர் சராசரியான குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளதாக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    சிறு மோதல் சம்பவம் கூட நடந்திராத வண்ணம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாகவும், இந்த சாதனையின் மூலம், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என்றும், பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளதாகவும், போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.

    • தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கமுதி:

    பசும்பொனில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (30-ந் தேதி) குரு பூஜையை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    தலைவர்கள் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குருபூஜை விழாவிற்கு வாகனங்களில் வருவோர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பசும்பொன்னில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பசும்பொன் கிராமத்தில் டிரோன்கள் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் துல்லியமாக முகத்தை காட்டும் எச்.டி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அமைதியாக வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன், எஸ்.பி. தங்கத்துரை மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் தருண் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தினான்.
    • சிறுவன் தருண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளான்.

    சென்னை:

    நாடு முழுவதும் காவல்துறையில் பணிபுரிந்து உயிரிழக்கும் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் 264 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

    டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் தருண் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தினான். சிறுவன் தருண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளான்.

    இதையொட்டி போலீஸ் தொடர்புடைய நிகழ்ச்சியில் அவன் அடிக்கடி பங்கேற்று வருகிறான். அந்த வகையில்தான் இன்று நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்று மரியாதை செலுத்தியுள்ளான்.

    இது தொடர்பாக சிறுவன் தருண் கூறும்போது, "காவல் துறை பணி சிறப்பானது. பெரிய ஆளான பிறகு நானும் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்தான்.

    இந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இன்று நடைபெற்றது. அந்தந்த மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    • புகார்தாரர்களிடம் துன்புறுத்தும் வகையில் செயல்படுவது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர வேண்டும்.
    • காவல் துறைக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

    சென்னை:

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார்தாரர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.

    சில போலீஸ் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் உள்ளனர். புகார்தாரர்கள் சில நேரங்களில் உயர் அதிகாரிகளை அணுகி இருந்தால் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது.

    புகார்தாரர்களிடம் துன்புறுத்தும் வகையில் செயல்படுவது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர வேண்டும். காவல் துறைக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வகையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
    • போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை:

    தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

    காவல்துறை பணியில் சேரும் போலீசாரை அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை செய்ய பயன்படுத்தி வரும் இந்த ஆர்டர்லி முறை தொடர்வது பற்றி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை தெரிவித்து இருந்தார்.

    75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்திலும் ஆங்கி லேயர் காலத்து ஆர்டர்லி முறை தொடர்வது வெட்க கேடானது என்றும் இதனை ஒழிக்க தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வகையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை டி.ஜி.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

    இந்த கூட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போலீஸ் அதிகாரிகளான சங்கர், அபய்குமார், மகேஷ்குமார் அகர்வால், கந்தசாமி, ஷகில் அக்தர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல் உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக உள்ள அனைத்து போலீசாரையும் உடனடியாக திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் இந்த நடவடிக்கையால் தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறை முடிவுக்கு வருகிறது.

    • தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
    • தஞ்சையில் பணிபுரிந்து காத்திருப்பு பட்டியலில் இருந்த டி.எஸ்.பி. கபிலன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆனார்.

    சென்னை:

    தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சம்பத் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கண்ணன் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் உதவி கமண்டன்டாகவும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சுரேஷ் ராமநாதபுரம் பயிற்சி டி.எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சையில் பணிபுரிந்து காத்திருப்பு பட்டியலில் இருந்த டி.எஸ்.பி. கபிலன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆனார். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் நெல்லை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

    • தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.
    • போலீசார் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டிக்கரை அகற்றத் தொடங்கி உள்ளனர்.

    ஊட்டி:

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில், போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தக் கூடாது, அலுவலக வாகனங்களில் மட்டுமே போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும்.

    எனவே அனைத்து போலீசாரும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்டு அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

    இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டிக்கரை அகற்றத் தொடங்கி உள்ளனர்.

    கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பயன்படுத்தும் 3 கார்கள், 14 மோட்டார் சைக்கிள்களில் ஒட்டப்பட்டிருந்த போலீஸ் ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர். இதுதொடர்பான அறிக்கை போலீஸ் உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கோத்தகிரி போலீசார் தெரிவித்தனர். இதேபோல மற்ற போலீஸ் நிலையங்களிலும் வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் துறையில் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்த வேண்டும்.
    • காவலர்களின் தனி நபர் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது.

    சென்னை:

    தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டி இருப்பார்கள். இதற்கு தடைவிதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவல் துறையில் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்த வேண்டும். காவலர்களின் தனி நபர் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது. இந்த உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம்.
    • டி.ஜி.பி சைலேந்திரபாபு வெங்கல் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர்:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம்.

    இன்று காலை அவர் தனது குழுவினருடன் சென்னையில் இருந்து திருவள்ளூர் பகுதிகளுக்கு சைக்கிளில் பயணம் சென்றார்.

    அப்போது செல்லும் வழியில் டி.ஜி.பி சைலேந்திர பாபு வெங்கல் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அங்கிருந்த கோப்புகளையும் பார்வையிட்டு பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் ஊத்துக்கோட்டையை அடுத்த அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்குகள் காப்பகத்தை பார்வையிட்டார்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்குச் சென்றார்.

    ×