search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்ளேர்"

    கடந்த 1985-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்சிங்சையும் டிக்ளேர் செய்த வெஸ்ட் இண்டீஸ் 33 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று அதேபோல செய்துள்ளது. #WIvSL
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

    டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. 



    இலங்கை அணி வெற்றி பெற 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள இலங்கை 277 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா? அல்லது 7 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுமா? என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதில், ஆச்சரியும் தரும் விஷயம் என்னவென்றால் 33 ஆண்டுகளுக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு இன்னிங்சையும் டிக்ளேர் செய்துள்ளது. கடந்த 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 511 மற்றும் 268 ரன்கள் எடுத்து இரண்டு இன்னிங்சையும் வெஸ்ட் இண்டீஸ் அணி டிக்ளேர் செய்திருந்தது.
    ×