search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாரில் மிட்செல்"

    • என் மனைவியுடன் இங்கே அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
    • என்னுடைய மகளுக்கு நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது புரிய வாய்ப்பில்லை.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்கவிருக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் துபாயில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

    ஐபிஎல் தொடரானது எப்போதும் பல வீரர்களின் எதிர்காலத்தை தலைகீழாக மாற்றியுள்ளது. பல இந்திய வீரர்கள் உட்பட, பல வெளிநாட்டு வீரர்களும் அவர்களுடைய கடினமான குடும்ப சூழலில் இருந்து மேலே வருவதற்கான சூழலை ஐபிஎல் தொடர் இதுவரை ஏற்படுத்தி தந்துள்ளது.

    அந்த வகையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செலை சுமார் 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    இத்தனை கோடிக்கு ஏலம் எடுத்தது குறித்து நியூசிலாந்து வீரர் மிட்செல் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது ஒரு குடும்பமாக எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இரவு என்று தான் சொல்லவேண்டும். என் மனைவியுடன் இங்கே அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட அன்று எனது பெரிய மகளுக்கு பிறந்தநாள்.

    என்னுடைய மகளுக்கு நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது புரிய வாய்ப்பில்லை. ஆனால் இந்த பெரிய தொகையின் மூலம் எனது இரு மகள்களும் அவர்களுக்கு பிடித்தவாறு வாழ்க்கையை வாழ்வார்கள். நாம் செய்வது அனைத்தும் நமது மகள்களுக்குத்தானே.

    இவ்வாறு மிட்செல் கூறினார்.

    ×