search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா சன்ஸ்"

    • ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.

    புதுடெல்லி:

    ஐபிஎல் 2024 தொடர் வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ஐபிஎல் தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.

    இந்நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை வரும் 2028-ம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.

    இதற்காக ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சைரஸ் மிஸ்திரி பயணித்த சொகுசு கார், சாலையின் தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்
    • சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மும்பை:

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

    அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பியபோது, பால்கர் மாவட்டம் சாரோட்டியில் உள்ள சூர்யா ஆற்றுப்பாலத்தில் சென்றபோது இன்று பிற்பகல் 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர் பயணித்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி உள்ளது.

    விபத்தில் உருக்குலைந்த கார்

    விபத்தில் உருக்குலைந்த கார்

    இந்த விபத்தில் காயமடைந்த கார் டிரைவர் உள்ளிடட் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, மத்திய மந்திரி பியூஷ் கோயல், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சைரஸ் மிஸ்திரி, 2012 முதல் 2016 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×