search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா 45X"

    டாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக உருவாகி வரும் 45X கார் இந்த பெயரில் தான் அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. #Tata45X



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என்றும் இது அந்நிறுவனத்தின் 45X கான்செப்ட் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    டாடா 45X கான்செப்ட் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹேரியர் கான்செப்ட் காருடன் அறிமுகமானது. சமீபத்தில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் புதிய ஹேரியர் எஸ்.யு.வி. காரின் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய டாடா 45X பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால் டாடா 45X கார் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது.



    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா 45X கார் அக்யூலா என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் பொது மக்களிடம் தனது புதிய கார் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்ற கேலஅவியை எழுப்பி, அதற்கான முதல் எழுத்தாக 'A' என தெரிவித்துள்ளது. 

    புதிய காரின் பெயர் இத்தாலிய மொழியில் இருக்கும் என்றும் இதற்கு அக்யூலா சரியானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்தாலிய மொழியில் அக்யூலா என்றால் தமிழில் கழுகு என்று பொருள்படும்.

    டாடா புதிய ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின்களில் நெக்சனை விட சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 45X பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #TataMotors #Car



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை டாடா நிறுவனம் தனது புத்தம் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் (டாடா 45X) மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    டாடா 45X கான்செப்ட் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹேரியர் கான்செப்ட் காருடன் அறிமுகமானது. சமீபத்தில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் புதிய ஹேரியர் எஸ்.யு.வி. காரின் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய டாடா 45X பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால் டாடா 45X கார் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது. 



    டாடா 45X மாடலின் இன்ஸ்ருமென்ட் கிளஸ்டரில் அனலாக் டையல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ஏ.சி. வென்ட்கள் டேஷ்போர்டின் இருபுறம் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது. இதன் சென்டர் கன்சோலில் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் மற்றும் டேஷ்போர்டு முழுக்க கருப்பு நிற தீம் செய்யப்பட்டுள்ளது.

    வெளிப்புறத்தில் டாடா 45X மாடல் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இம்பேக்ட் டிசைன் 2.0-வை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஸ்போர்ட் தோற்றத்தில் பெரிய சக்கரங்கள் மற்றும் வீல் ஆர்ச்களை கொண்டிருக்கும்.

    டாடா கான்செப்ட் ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின்களில் நெக்சனை விட சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா 45X பிரீமியம் ஹேட்ச்பேக் கார் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. #TataMotors
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான டாடா 45X-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது.

    இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டாடா 45X கான்செப்ட் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் H5X கார் மாடலையும் அறிமுகம் செய்தது. டாடா ஹேரியர் H5X அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    டாடா 45X ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு டாடா 45X கார் சோதனை செய்யப்படும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரஷ்லேன் வெளியிட்டிருக்கும் புதிய ஸ்பை படங்களில் காரின் விவரங்கள் தெரியவந்துள்ளது.



    புதிய ஸ்பை படங்களில் காரின் முன்பக்க கிரில் மற்றும் பெரிய ஏர் டேம், மெல்லிய ஹெட்லேம்ப்கள் மற்றும் கனெக்ட்டெட் டெயில் லைட்கள் இடம்பெற்றுள்ளன. காரின் உள்புறத்தில் ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டேஷ்போர்டு விவரங்கள் தெரிகிறது. இத்துடன் பெரிய மிதக்கும் படியான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

    இது டாடா நெக்சன் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. டாடா 45X மாடலின் இன்ஸ்ருமென்ட் கிளஸ்டரில் அனலாக் டையல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ஏ.சி. வென்ட்கள் டேஷ்போர்டின் இருபுறம் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது. இதன் சென்டர் கன்சோலில் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் மற்றும் டேஷ்போர்டு முழுக்க கருப்பு நிற தீம் செய்யப்பட்டுள்ளது.

    வெளிப்புறத்தில் டாடா 45X மாடல் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இம்பேக்ட் டிசைன் 2.0-வை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஸ்போர்ட் தோற்றத்தில் பெரிய சக்கரங்கள் மற்றும் வீல் ஆர்ச்களை கொண்டிருக்கும்.

    டாடா கான்செப்ட் ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின்களில் நெக்சனை விட சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: Rushlane
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் 45X மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகி உள்ளது. #TataMotors



    இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான 45X காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்த கார் 2019 பண்டிகை காலத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் டாடா 45X கான்செப்ட் மாடல் எதிர்கால வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய டாடா 45X மாருதி நிறுவனத்தின் பலேனோ மற்றும் ஹூன்டாய் எலைட் i20 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆல்ஃபா என டாடா மோட்டார்ஸ் அழைக்கும் புதிய மேம்படுத்தப்பட்ட மாட்யூலர் பிளாட்ஃபார்ம் சார்ந்து டாடா 45X உருவாக்கப்படுகிறது. டாடா நெக்சானில் வழங்கப்பட்டு இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களே புதிய மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    அந்த வகையில் டாடா 45X மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 170 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும். இதன் டீசல் வேரியன்ட் 1.5 லிட்டர் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 260 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என்றும் டாடா 45X மாடல் இந்திய சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 6-ஸ்பீடு மேனுவர் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    டாடா 45X மாடலின் உள்புறம் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் இருக்கைகளில் உயர் ரக லெதர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளுடன் சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ×