search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்பீம்"

    • ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜெய்பீம்.
    • இப்படம் ஏற்கனவே தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் 2 விருதுகள் பெற்றது.

    நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.


    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன.


    சமீபத்தில் இப்படத்திற்காக 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்தன. சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, மேலும் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.


    இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விழாவில் விருதுக்கு தேர்வாகியுள்ளது. அதன்படி 12 வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

    • இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.
    • ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன.

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார். அதன்பின் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    முன்னதாக பிரிவினையை ஏற்படுத்தி, ஜாதி, மத கலவரங்களை துாண்டும் வகையில், ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இதனால், நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ருத்ர வன்னியர் சேனா தலைவர் சந்தோஷ், சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அதன் விபரத்தை, வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரனை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேளச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் தாக்கல் செய்த மனுவை ஜூலை 21-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

    • இருளர் இன மக்களின் உண்மை சம்பவத்தை மையக்கருத்தாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஜெய்பீம்.
    • ராகவா லாரன்ஸ் செயலுக்காக ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இருளர் இன மக்களின் உண்மை சம்பவத்தை மையக்கருத்தாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் 'ஜெய் பீம்'. இப்படத்தினை இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்தார். மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஜெய் பீம்' ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படத்தின் நிஜ நாயகியான பார்வதி அம்மாள் வறுமையில் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், பார்வதி அம்மாளுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் வீடு கட்டி தருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


    பார்வதி அம்மாள் குடும்பத்தினருடன் ராகவா லாரன்ஸ்

    பார்வதி அம்மாள் குடும்பத்தினருடன் ராகவா லாரன்ஸ்

    இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் , பார்வதி அம்மாளின் குடும்பத்தினரை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவருக்கு வீடு கட்டி தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா மற்றும் அவருடைய மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார். ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்காக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன் என்றார்.
    • ஜெய்பீம் படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை.

    சென்னை:

    முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார்.

    படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது.

    ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன். அதனால் மற்றவர்களை விட என்னை அந்தப் படம் கூடுதலாக பாதித்தது என தெரிவித்தார்.

    ஜெய்பீம் படம் விவகாரத்தில் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வரும் நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2-ம்தேதி வெளியானது. ஒரு சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டதாக  விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யாவும் பதில் அளித்தார்.

    இருந்தாலும், விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ஆயுதப்படையை சேர்ந்த 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    ×