search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயின் சமூகத்தினர்"

    ஜெயின் சமுதாய மக்களுக்கு என்றென்றும் அன்புடையவராக இருப்போம் என்று சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    ஜெயின் மதகுரு மகாஸ் ரமண் நடைபயணமாக தமிழகம் வந்துள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    உலகில் உள்ள அனைத்து சமயமும் மனிதனை பக்குவப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

    இன்று வருகை தந்துள்ள தவத்திரு மகாஸ்ரமண் அவர்களை ‘தமிழ்நாடு அரசின் சிறப்பு விருந்தினர்’ என்ற சிறப்பை அளித்து, நாங்கள் வரவேற்கிறோம்.

    ஓராண்டு காலம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளுக்கு எல்லாம் நடைபயணம் மேற்கொண்டு, அஹிம்சை, அமைதி, அன்பு ஆகியவற்றை பரப்பி, தமிழ்நாட்டில் அறநெறிகளை தழைத்தோங்கச் செய்யும் தவநெறியாளர் அவர்களை நான் மனமார உவந்து பாராட்டுகிறேன்.

    திடமான நம்பிக்கை, மேன்மையான அறிவு, நற்செயல் என்ற போதனைகளை மக்களிடையே போதித்தவர் மகாவீரர் ஆவார்.

    இன்று மக்கள்நல நோக்கத்துடன் மகாவீரர் வழியில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தவத்திரு மகாஸ்ரமணார், 800-க்கும் மேற்பட்ட துறவியர்களையும், பல்லாயிரக்கணக்கான சீடர்களையும் வழிநடத்தி வருகிறார்.


    ஆகவே, அவர்கள் மன அமைதிக்காக ஞானிகளையும் மகான்களையும் குருமார்களையும் தேடி இந்தியாவிற்கு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடுதான் அவர்களுக்கு சரணாலயமாக திகழ்கிறது. தமிழ்நாடுதான் அடைக்கலம் கொடுத்து அவர்களை அமைதிப்படுத்தி மகிழ்விக்கிறது.

    இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் நடந்து வரும் தீமைகளையும், இழிவான செயல்களையும், தங்களுடைய தூய போதனைகளால் தடுத்து நிறுத்தி, மனிதனை செம்மைப்படுத்தும் நற்பணிகளை மேற்கொண்டு வருகின்ற, போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய தவத்திரு மகாஸ்ரமண், தம் சீடர்களுடன் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    தவத்திரு மகாஸ்ரமன் அகிம்சை நடைப்பயணம் வெற்றி பெறவும், அவரது அறப்பணி தொடர்ந்து நடைபெற்று, மக்களுக்கு நலம் பயக்க வேண்டும் என்றும் நான் இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

    சென்னையில், புயல், வெள்ளம் வந்த காலங்களில் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஓடோடி வந்து உதவி செய்ததை என் கண்களால் பார்க்க முடிந்தது.

    அப்படிப்பட்ட ஜெயின் சமுதாய மக்களுக்கு எனது உணர்வுபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயின் சமுதாய மக்களுக்கு என்றென்றும் அன்புடையவராக இருப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    ×