search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிகட்டு"

    • திமிலை உயர்த்தி வந்த காளைகளை, மல்லுகட்டி அடக்கிய காளையர்கள்
    • கரைபுரண்டோடிய உற்சாகம்

    மணப்பாறை, 

    மணப்பாறை அருகே மலையடிபட்டியில் நடைபெற்று வரும் ஜல்லி கட்டில் ஏராளமான காளை களும், காளைய ர்களும் களம் கண்டு வருகின்றனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அங்குள்ள ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர், ஜல்லிக்கட்டு கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகள், மாடு பிடி வீரர்களுக்கு சாவல் விடுத்தது. சாவாலை ஏற்கும் வண்ணம், அப்பகுதி மண்ணின் காளையர்கள், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க துணிந்தனர். இந்த வீரமிகு விளையாட்டை காண திருச்சி மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். துள்ளி வந்த காளைகளை, துரிதமாக செயல்பட்டு அடக்கி வெற்றி பெற்ற காளையர்களையும், சிக்காமல் ஆட்டம் காட்டி சென்ற காளைகளையும் பார்வையாளர்கள் கைத்தட்டி, விசில் அடித்து பாராட்டியது விறுவிறுப்பை கூட்டியது.இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், – வெள்ளி நாணயங்கள், என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்க ப்பட்டது. போட்டி யில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவமுகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித் குமார் மேற்பார்வையில், மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி. ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • களமாடிய காளைகளால் அதிர்ந்த காளையர்கள்
    • பொத்தமேட்டுபட்டியில் கோலாகலம்

    மணப்பாறை,

    தை மாதம் பிறந்ததில் இருந்து தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தினந் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி வரு–கிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது. இதைய–டுத்து மதுரை அவனியா–புரம், பாலமேடு, அலங்கா–நல்லூரில் நடைபெற்றது.திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு பெரிய சூரியூரில் 16-ந்தேதி நடை–பெற்றது. இதைய–டுத்து மணப்பாறை அருகே கருங்குளம், ஆவாரங்காட் டில் நடந்த போட்டியில் பங்கேற்ற காளைகள் தங்களது வளர்ப்பை கம்பீ–ரத்துடன் காட்டி மிரட்டி–யது. நாங்களும் சளைத்த–வர்கள் அல்ல, என்பதை மெய்ப்பிக்கும் வகையில் காளையர்களும் திமில்களை பிடித்து அடக்கி ஆண்டனர்.அதன் தொடர்ச்சியாக மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் புனித வியாகுல மாதா திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 750 காளைகள், 300 மாடு–பிடி வீரர்கள் கலந்து– கொண் டனர்.இதனை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் செவலூர் சின்னாக்கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டதை தொடர்ந்து கோவில் களை–கள் மற்றும் உள்ளூர் காளைகள் அடுத்தடுத்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தது.அதன் பின்னர் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், கரூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப் பட்ட காளைகள் கொட்டும் மழையிலும் கோலாகாலமாக அவிழ்த்து விடப்பட்டது. உற்சாகத்துடனும், வீரத்து–டனும் களமாடிய ஒருசில காளைகள், தங்களை பிடிக்க வந்த காளையர்களை மிரட் டியது.இதில் தன்னை அடக்க வந்த வீரர்களை காளை–கள் ஆக்ரோசமாக தூக்கி வீசுவதும், அதை வீரர்கள் துணிந்து பிடித்து அசத்து–வதுமாக மழை, குளிரிலும் ஜல்லிக்கட்டு களத்தில் அனல் பறந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர் களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரும் மார்ச் 3-ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    • ஜல்லிக்கட்டு விழா சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.

    சேந்தமங்கலம்:

    சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தில் இருந்து நைனாமலைக்கு செல்லும் சாலையில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக சேந்தமங்கலம் ஜல்லிகட்டு விழா சங்கத்தின் சார்பில் ஜல்லிகட்டு விழா நடந்தது.

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரும் மார்ச் 3-ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அட்மா குழு தலைவர் அசோக்குமார், துணை தலைவர் தனபாலன், ஜல்லிக்கட்டு விழா சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.

    தமிழக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடத்த சேந்தமங்கலம் தி.மு.க., நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு விழா சங்க நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.

    • 17-ந் தேதி நடைபெறுகிறது
    • வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு நடப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இனி வரிசையாக ஆங்காங்கே என மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும். குறைந்தது 5 மாதங்களுக்கு இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் வருகிற 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அராசணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தினை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ள வழிகாட்டல்கள் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா? என பார்வையிடுவார்கள். இந்த ஆய்வின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பார்கள். 

    • உரிய வகையில் அனுமதி பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை...
    • ஜல்லிகட்டு நடத்த விதிமுறைகள் அறிவிப்பு

    அரியலூர்,

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டுகீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு முதல், கோவிட்-19 பெருந்தொற்று குறித்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும் மற்றும் பார்வையாளர்கள் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கோவிட்-19 பெருந்தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பதுடன், கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கான (இரண்டு தவணைகளும்) சான்று பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளை உரிமையாளர், உதவியாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முகக் கவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் - ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் விழாக் குழுவினர் கீழ்க்கண்ட விவரங்களுடன் முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கிராம விழாக்குழுவினரின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விண்ணப்பம். காப்பீடு செய்யப்பட்டதற்கான காப்பீடு நகல். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்திரவாத பத்திரம். இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான அரசாணை நகல். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளின் எண்ணிக்கை. ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ள மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை. கடந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததில், அசாம்பாவிதம் ஏதேனும் நடந்திருப்பின், அதற்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான நகல். கடந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற காளைகளில், காயம் அடைந்த காளைகளின் எண்ணிக்கை மற்றும் விவரம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் தல வரைபடம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தின் மொத்தப் பரப்பளவு. காளைகள் ஓடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் பரப்பளவு. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் மொத்த இடத்தின் வரைபடம். ஜல்லிக்கட்டு களம் அமைத்திடும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்த கடித நகல்.

    மேற்கண்ட தங்களது ஆவணங்களை மூன்று நகல்களில் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அறிவிக்கை செய்யப்படாத கிராமம் எனில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான ஆதாரம் (புகைப்பட ஆதாரம், செய்தி நறுக்கு, செய்தித்தாள், கல்வெட்டு ஆதாரம், கிராம பஞ்சாயத்து தீர்மானம், துண்டு பிரசுரம்., போன்றவை) ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த தொடர்புடைய குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை தொடர்புடைய குழுவினர் மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளை உரிமையாளர், ஒரு உதவியாளர் மற்றும் காளை விவரங்களை நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை, அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெறாமல் நடத்துபவர்கள் மீது காவல் துறையின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்காததால் குழப்பம்
    • ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள்,மாடுபிடி வீரர்கள் அனுமதிச்சீட்டு பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஜனவரி 2ம் தேதி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா ஆறாம் தேதி நடைபெறும் என்று விழா குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இன்று வரை அதற்கான எந்த அனுமதி உத்தரவும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. 6ம்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனுமதிச்சீட்டு பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக தச்சங்குறிச்சி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவுற்ற நிலையில் உரிய அனுமதி வராததால் விழா குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு விழா தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டால், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள்,விழா குழுவினர் ,கிராம பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதனால் தேவையற்ற குழப்பம் தீரும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    ×