என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடத்தை குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
சேந்தமங்கலத்தில் ஜல்லிகட்டு நடக்கும் இடத்தில் ஆய்வு
- நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரும் மார்ச் 3-ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு விழா சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தில் இருந்து நைனாமலைக்கு செல்லும் சாலையில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக சேந்தமங்கலம் ஜல்லிகட்டு விழா சங்கத்தின் சார்பில் ஜல்லிகட்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரும் மார்ச் 3-ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அட்மா குழு தலைவர் அசோக்குமார், துணை தலைவர் தனபாலன், ஜல்லிக்கட்டு விழா சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடத்த சேந்தமங்கலம் தி.மு.க., நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு விழா சங்க நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.






