search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜமா பந்தி"

    • தினம் ஒரு உள்வட்டத்தில் உள்ள கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும்.
    • 31-ந் தேதி சென்னிமலை உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடைபெறவுள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் பெருந்துறை உள்வட்டத்தில் ஜமா பந்தி நடைபெற உள்ளது. இந்த ஜமா பந்தியில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக வழங்கி உடனடித் தீர்வு பெறலாம்.

    இந்த ஜமா பந்தி நிகழ்ச்சி 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை தினம் ஒரு உள்வட்டத்தில் உள்ள கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும். அதன்படி, 25-ந் தேதி பெருந்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கும், 26-ந் தேதி திங்களூர் உள்வட்டத்துக்கும், 29-ந் தேதி காஞ்சிக்கோயில் உள்வட்டத்துக்கும், 30-ந் தேதி வெள்ளோடு உள்வட்டத்துக்கும், 31-ந் தேதி சென்னிமலை உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடைபெறவுள்ளது.

    எனவே, சம்பந்தப்பட்ட உள்வட்டத்தில் உள்ள மக்கள் அந்தந்த தேதியில் தங்கள் பகுதிக்கு நடைபெறவுள்ள ஜமா பந்தியில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    • நாடியம்மன் கோவிலில் சம பந்தி விருந்து நடைபெற்றது
    • பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோ யிலில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட அலுவலர் ரம்யாதேவி தலைமை தாங்கினார்.

    ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி முன்னிலை வகித்தார். ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், புதுக்கோட்டை மாவட்ட சங்கத் தலைவரும், கிராம நிர்வாக அலுவலருமான லோகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமான கலந்துகொண்டனர். ஜமபந்தி விருந்தில் நகர மக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொது ம மக்கள் ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

    ×