search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செப்பு சிலைகள்"

    • இந்த சிலை 11ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.
    • ஒருபுறம் புலி ஆடையும் மறுபுறம் மகளிர் அணியும் ஆடையும் இடம் பெற்றுள்ளன.

    அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள செப்பு சிலைகளில் சில சிலைகள் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

    விநாயகர் செப்பு சிலை ஒன்று 12ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டு இன்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது.

    சுமார் 2 அடி உயரம் கொண்ட இந்த விநாயகர் நின்ற கோலத்தில் இருக்கிறார்.

    செப்பு சிலைகளில் மூலநாயகர் என்றும் பிரதோஷ நாயகர் என்றும் அழைக்கப்படும் செப்பு சிலை முக்கியமானது.

    சிவபெருமான், மழு, மான், அபயம் கொண்டு இடது கையால் அம்மனை அனைத்தபடி உள்ளார்.

    இந்த செப்பு சிலை 15ம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள்.

    பிரதோஷ நாட்களில் இந்த சிலை ஆலயத்துக்குள் மட்டுமே உலா வரும்.

    வெளியில் வீதிஉலா வருவதில்லை.

    அதுபோல முருகர் செப்பு சிலை 6 கைகளுடன் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறது.

    இந்த சிலை 11ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.

    வள்ளி&தெய்வாணை செப்பு சிலைகளும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    காதுகளில் குண்டலங்களும், கச்சை அணிந்த நிலையில் வளையல், சிலம்பு, மோதிரம் அணிந்திருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.

    சந்திரசேகர் செப்பு சிலை, மழு, மான், அபயவரதங்களை கொண்டு நின்ற நிலையில் உள்ளது.

    மூன்று அடி உயரமுள்ள இந்த சிலையும் கம்பீரமானது.

    மற்றொரு சிறிய சந்திரசேகர் சிலையும் உள்ளது.

    இந்த சிலையில் கையில் உள்ள ரேகைகள் கூட தெரியும் அளவில் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோன்று அர்த்தநாரீஸ்வரர் செப்பு சிலையும் வித்தியாசமானது.

    12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த சிலை திருவாசியுடன் இணைந்து பத்ரபத்ம பீடத்தில் நின்ற நிலையில் உள்ளது.

    தலை முழுவதும் ஜடா மகுடமாக அமைந்துள்ளது.

    இடது கையை இடையில் வைத்துக் கொண்டு இருப்பது போல் செய்துள்ளனர்.

    இரு காதுகளிலும் மகர குண்டலங்கள் தொங்குகின்றன.

    ஒருபுறம் புலி ஆடையும் மறுபுறம் மகளிர் அணியும் ஆடையும் இடம் பெற்றுள்ளன.

    மிகவும் கலைநுட்ப வேலைபாடுகளுடன் திகழும் இந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையை வீதிஉலாவுக்கு பயன்படுத்துவது இல்லை.

    கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத் திருவிழாவின் போது இந்த செப்பு சிலை ஆலயத்துக்குள் இருந்து வெளியில் வரும்.

    தீப மண்டபத்தில் அணிவகுத்து நிற்கும் பஞ்ச மூர்த்திகளுக்கு ஓரிரு நிமிடங்கள் மட்டும் காட்சி கொடுத்து விட்டு இந்த செப்பு சிலை உடனே உள்ளே சென்றுவிடும்.

    பார்வதிக்கு சிவபெருமான் இடது பாகம் தந்ததை உணர்த்தும் வகையில் இந்த அர்த்தநாரீஸ்வரர் செப்பு சிலை ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே வெளியில் வருவது குறிப்பிடத்தக்கது.

    • பொதுவாக உற்சவர் சிலைகள் கல்சிலைகளாக இருக்காது. உலோகத்தாலான சிலைகளாகவே இருக்கும்.
    • சில சிலைகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆலய கருவறைகளில் கல்லால் அமைக்கப்பட்ட மூலவர் சிலைகள் இடம் பெற்றிருக்கும்.

    அந்த சிலைகளை ஒருபோதும் வெளியில் கொண்டுவர முடியாது.

    ஆலயங்களில் உற்சவம் நடைபெறும் போது சுவாமி திருவீதி உலா நடத்துவார்கள்.

    அந்த சமயங்களில் கருவறை மூலவருக்கு பதில் உற்சவர் திருவீதி உலா வருவார்.

    அப்படி வரும் உற்சவருக்கு மூலவருக்குரிய அனைத்து ஆற்றல்களும் நிரம்ப இருக்கும்.

    எனவே தான் உற்சவர் சிலைகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

    பொதுவாக உற்சவர் சிலைகள் கல்சிலைகளாக இருக்காது.

    உலோகத்தாலான சிலைகளாகவே இருக்கும்.

    ஐம்பொன் சிலைகள், செப்பு சிலைகள் என்று உற்சவர் சிலைகளை வடிவமைப்பார்கள்.

    அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் 40க்கும் மேற்பட்ட செப்பு சிலைகள் இருக்கின்றன.

    இந்த சிலைகளில் பெரும்பாலானவை பஞ்சலோகங்களால் தயாரிக்கப்பட்டவை.

    அண்ணாமலையார் ஆலயத்தின் பழமையான செல்வ சிறப்பாக இவை கருத்தப்படுகின்றன.

    இங்குள்ள செப்பு சிலைகள் சோழர் காலத்தில் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு காலக்கட்டங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    இந்த பஞ்சலோக சிலைகளில் அதிக அளவு தாமிரம் சேர்க்கப்பட்டுள்ளதால் சிலைகள் அனைத்தும் சிவந்த நிறத்திலேயே காணப்படுகின்றன.

    பீடங்களுடன் கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையில் இருக்கும் இந்த சிலைகள் உற்சவ காலங்களில் ஆடை, அலங்காரங்களுடன் வெளியில் வரும்போது பிரமிப்பை ஏற்படுத்தும்.

    சில சிலைகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    விநாயகர், பிட்சாடனார் சிலைகள் தங்க மூலாம் பூசப்பட்டுள்ளன.

    முன்பு இந்த சிலைகள் பொக்கிஷமேடை அறையில் வைக்கப்பட்டிருந்தன.

    தற்போது இந்த செப்பு சிலைகள் அனைத்தும் ஐந்தாம் பிரகாரத்தில் தனி அரங்கு கட்டப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    சில ஐம்பொன் சிலைகள் உற்சவ விழாக்காலங்களில் கூட வெளியில் வருவதில்லை.

    பயன்படுத்தப்படாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.

    அர்த்தநாரீஸ்வரர், அறுபத்து மூவர் ஆகியோரது செப்பு சிலைகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வெளியில் வந்து செல்கின்றன.

    ×