search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செட்டிநாடு"

    • ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் செட்டிநாடு அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது.
    • இந்தியா நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்கள் ஒலிவியா சரவணன் மற்றும் நவீன், செட்டிநாடு சேம்ப்ஸ் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம், வி.எக்ஸ்போ இந்தியா இணைந்து ஜூனியர் பேட்மின்டன் லீக் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்தியது.சர்வதேச தரத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை சிட்டி கிங்ஸ்டர்ஸ், திருச்சி ராக்போர்ட் ராக்கர்ஸ், திருவள்ளுவர் வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ், செட்டிநாடு சேம்ப்ஸ், திருப்பூர் வாரியர்ஸ், காஞ்சி எஸ்பார்க்ஸ் ஏசஸ், தஞ்சை தலைவாஸ் என 8 அணிகள் பங்கேற்றன.

    13 வயதில் இருந்து 19 வயது உட்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.இறுதி போட்டிக்கு காரைக்குடி செட்டிநாடு சேம்ப்ஸ் அணியம்,திருப்பூர் வாரியர்ஸ் அணியும் தகுதி பெற்றன.விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் செட்டிநாடு சேம்ப்ஸ் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

    வெற்றி வாகை சூடிய செட்டிநாடு சேம்ப்ஸ் அணியின் உரிமையாளர் டாக்டர் லெனின் முத்துராஜ் கூறுகையில், லீக் போட்டியில் ஆரம்பம் முதலே செட்டிநாடு சேம்ப்ஸ் அணியின் வீரர்-வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதி போட்டியில் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் மாணவி சானியா சிக்கந்தர் இரட்டை யர் பிரிவில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். செட்டிநாடு சேம்ப்ஸ்சின் ஸ்பான்சர்களான செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் குமரேசனுக்கும், போட்டியை திறம்பட நடத்திய தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கம் மற்றும் வி.எக்ஸ்போ இந்தியா நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்கள் ஒலிவியா சரவணன் மற்றும் நவீன், செட்டிநாடு சேம்ப்ஸ் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவன் அஸ்வின் லெனின் காஞ்சிபுரம் ஸ்பார்க்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×