search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன உளவு கப்பல்"

    • மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • பிரதமர் மோடி தலைமையின் கீழ் எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக உள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.

    இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்தனர்.

    இந்நிலையில், உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கையில் இருப்பதால் எழக்கூடிய எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

    இது தொடர்பாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் எந்த வகையான சூழ்நிலையையும் திறம்பட கையாள்வதற்கு நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். அதுபற்றி தெளிவாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாரதீப், விசாகப்பட்டினம் மற்றும் சென்னை துறைமுகத்தில் ஏற்கனவே உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

    • இலங்கையை நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்ட சீன கப்பல்.
    • சீன உளவு கப்பல், ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்குள் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தின் உளவு கப்பலான 'யுவான் வாங்' கடந்த 11-ந் தேதி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இதையடுத்து சீன கப்பலின் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. இதற்கு சீனா தனது அதிருப்தியை தெரிவித்தது.

    இதற்கிடையே இலங்கையை நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்ட சீன கப்பல், இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.

    ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு கிழக்காக 600 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. துறைமுகத்துக்குள் நுழைய அனுமதிக்காததால் காத்திருந்தது. இது தொடர்பாக இலங்கையுடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சீன உளவு கப்பல், ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்குள் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதன்படி அக்கப்பல், வருகிற 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்.

    சீன கப்பல், எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றுக்காக வருவதாக தெரிவிக்கப் பட்டாலும் அக்கப்பலில் செயற்கை கோல் கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி பணி உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய கவலை தெரிவித்தது.

    இந்த நிலையில் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வர உள்ள சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது. சீன கப்பல், துறைமுகத்துக்கு வரும் போது சில நிபந்தனைகள் விதிக்கும்படி இலங்கை பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி, இலங்கை பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் கப்பல் இருக்கும்போது அதன் தானியங்கி அடையாள அமைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கை கடல் பகுதிக்குள் எந்தவித அறிவியல் ஆராய்ச்சி பணிகளும் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • சீனாவின் இந்த அடாவடி செயல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
    • பாகிஸ்தான் நாட்டு போர்க் கப்பலும் இப்போது இலங்கை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    சீனாவின் உளவுகப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பலை இலங்கை அம்பந்தட்டை துறைமுகத்தில் 6 நாட்கள் நிறுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்நாடு இலங்கையிடம் அனுமதி கேட்டது.

    இதற்கு முதலில் ஒப்புதல் அளித்த இலங்கை இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக பின் வாங்கியது. இதனால் உளவு கப்பலை இலங்கைக்கு வருவதை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் இதை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் அந்த உளவு கப்பலை சீனா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

    யுவான் வாங்க் 5 கப்பல் நேற்று இலங்கையின் அம்பந்தட்டை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. தற்போது அந்த கப்பல் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த கப்பல் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கை கோள்களை கண்டறியும் அதி நவீன வசதிகள் கொண்டது.

    சீனாவின் இந்த அடாவடி செயல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

    இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பாகிஸ்தான் நாட்டு போர்க் கப்பலும் இப்போது இலங்கை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவில் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ் தைமூர் என்ற போர்க் கப்பல் மலேசியாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டது. இந்த கப்பலை வங்காளதேசம் சட்டோ கிராம் என்ற துறைமுகத்தில் நிறுத்த பாகிஸ்தான் அனுமதி கேட்டது.

    ஆனால் இதற்கு வங்காளதேசம் அனுமதி மறுத்து விட்டது. வங்க தேச பிரதமர் ஷேக்ஹ சீனா விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து இலங்கை அப்பந்தட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்குமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. இதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து பாகிஸ்தான் போர்க்கப்பல் அப்பந்தட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கருவிகள், லேசர் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகளை கொண்ட வசதிகள் உள்ளது.

    பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையினை எடுத்து வருகிறது. சீனாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வரும் பாகிஸ்தான் தற்போது தனது போர்க் கப்பலை இலங்கை கடல் பகுதியில் நிறுத்தி உள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துஇருக்கிறது.

    அம்பந்தட்டை துறைமுகம் இலங்கை தலைநகர் கொழும்புக்கு மிக அருகில் உள்ளது.

    சீனாவின் உளவு கப்பல் இங்கிருந்து தமிழ்நாடு உள்பட தென்இந்தியாவில் உள்ள பாதுகாப்பு தளங்களை வேவு பார்க்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. தமிழக கடற்பகுதியில் இருந்து கொழும்பு சிறிது தூரத்தில் தான் உள்ளது. இதனால் இந்த துறைமுகத்தில் இருந்து எளிதாக தமிழகத்தை கண்காணிக்கலாம் .இதன் காரணமாக தமிழக பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி, இலங்கை துறைமுகத்தில் நிற்கும் சீனா, பாகிஸ்தான் கப்பல்களால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பல்களின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    • தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும்.
    • சீன உளவு கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கைக்கு வருகிறது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தின் உளவு கப்பலான 'யுவான் வாங்-5' இலங்கையின் ஹம்பந் தோட்டை துறைமுகத்துக்கு இம்மாதம் 11-ந்தேதி (நாளை) வர உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அந்த கப்பல் 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    சீன கப்பல், இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. செயற்கைகோள் கண்காணிப்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வசதிகள் கொண்ட சீன உளவு கப்பலில் இருந்து 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.

    அதன்படி தமிழகத்தின் கல்பாக்கம்-கூடங்குளம் உள்பட அணுமின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும். அதேபோல் தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக கப்பலின் வருகையை தள்ளிவைக்கு மாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக கடந்த 5-ந்தேதி சீன வெளியுறவுத்துறைக்கு இலங்கை கடிதம் அனுப்பியது. கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை கேட்டு கொண்டதற்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது.

    இதுதொடர்பாக சீனா கூறும்போது, 'இலங்கை அதன் சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க அதற்கு உரிமை உள்ளது. சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது பொதுவான நலன்களை பூர்த்தி செய்கிறது. பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு, இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது' என்றது.

    இதற்கிடையே சீன கப்பல் வருவதை தள்ளி வைக்குமாறு இலங்கை கூறியிருந்த நிலையில் அந்த கப்பல் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    சில நாட்களுக்கு முன்பு தைவான் கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த சீன உளவு கப்பல் தற்போது இந்தோனேஷியா கடற்கரைக்கு மேற்கில் 26 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    அந்த கப்பல் இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன உளவு கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கைக்கு வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அதனை இந்தியா ஏற்கவில்லை. இதற்கிடையே சீன கப்பலின் பயணத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஹம்பந்தோட்டை துறைமுகம் அமைக்க சீனா உதவியது. அந்த துறைமுகம் 2017-ம் ஆண்டு சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

    • 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
    • சீன கப்பலின் வருகை நோக்கம் எரி பொருளை நிரப்புவது மட்டுமே.

    கொழும்பு:

    சீனா ராணுவத்தின் யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல் இலங்கையின் ஹம்பந் தோட்டை துறைமுகத்துக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளது என்றும் அந்த கப்பல் 17-ந்தேதி வரை இலங்கையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்திய கடல் பகுதி அருகே சீன உளவு கப்பல் வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா, இலங்கை அரசிடம் தனது எதிர்ப்பை தெரிவித்தது.

    செயற்கைகோள் கண்காணிப்புபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணைகள் வசதிகள் ஆகியவற்றை கொண்ட சீன கப்பலில் இருந்து 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.

    அதன்படி தமிழகத்தின் கல்பாக்கம்-கூடங்குளம் உள்பட அணுமின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும். அதேபோல் கேரளா, ஆந்திரா கடலோர பகுதிகளையும், தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியா வின் எதிர்ப்புக்கு இலங்கை பணிந்தது. உளவு கப்பல் வருகையை ஒத்திவைக்கு மாறு சீனாவுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது.

    இதுதொடர்பாக சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவு அமைச்சகம் விடுத்த கோரிக்கையில், சீன கப்பல் திட்டமிட்டபடி வருகையை முன்னெடுத்து செல்ல வேண்டாம் எனவும் கப்பல் வருவதை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை கப்பலின் வருகையை தள்ளி வைக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கான கடிதத்தை கடந்த 5-ந்தேதி சீனாவுக்கு இலங்கை அனுப்பியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைக்கான சீன தூதர் கூறும்போது, 'கப்பலுக்கு அனுமதி மறுப்பது இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்றார்.

    சீனாவின் உளவு கப்பல் பயணம் நிறுத்தப்படும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீன கப்பல், எரிபொருள் நிரப்புவதற்காக ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 13-ந்தேதி சீனாவில் இருந்து புறப்பட்ட அந்த கப்பல் தற்போது தைவான் அருகே பயணம் செய்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறும் போது, 'சீன கப்பலின் வருகை நோக்கம் எரி பொருளை நிரப்புவது மட்டுமே. இலங்கையில் எந்தவொரு உள் விவகாரங்களிலும், வியாபாரத்திலும் சீன கப்பல் அல்லது அதன் பணியாளர்கள் ஈடுபடமாட்டார்கள்.

    இதற்கிடையே சீனாவும் எப்போதும் இலங்கைக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உண்மையான நண்பர்களாக உதவுகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லுறவுக்கும், நம்பிக்கைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையில் எதையும் செய்யாது' என்றார்.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் எல்லைக்கு அருகில் இந்த கப்பல் நிறுத்தப்படுவதால் இது பாதுகாப்பு அச்சுறுத்துலாக கருதப்படுகிறது.
    • இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் தனது ராணுவ ஆதிக்கத்தை நிலை நிறுத்துதற்கு வசதியாக சீனா அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து உள்ளது.

    இதற்கு கைமாறாக இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகத்தை 99 ஆண்டுகள் குத்தையாக சீனாவுக்கு அளித்துள்ளது. இது இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள துறைமுகம் ஆகும்.

    இதையடுத்து இந்த துறைமுகத்தில் தனது உளவு கப்பலை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை சீனா எடுத்து வருகிறது.

    நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்ட யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இந்த துறைமுகத்துக்கு சீனா அனுப்ப முடிவு செய்தது.

    சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இக்கப்பல் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாகவும், நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்தியாவின் எல்லைக்கு அருகில் இந்த கப்பல் நிறுத்தப்படுவதால் இது பாதுகாப்பு அச்சுறுத்துலாக கருதப்படுகிறது.

    இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளும் திறன் இந்த உளவு கப்பலுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

    பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானதும் இந்தியா உஷார் ஆனது. ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இது பற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேசப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் சீன உளவுக்கப்பல் இலங்கையை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இக்கப்பல் வருகிற 11 அல்லது 12-ந்தேதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்து சேரும் என தெரிகிறது. 17-ந்தேதி வரை இக்கப்பல் இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    அதேசமயம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

    தைவானை சுற்றி சீனா தனது படைகளை குவித்து வைத்து இருக்கும் நிலையில் தற்போது இந்தியாவை உளவு பார்க்க கப்பலை இலங்கைக்கு அனுப்பி உள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×