search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்கார்டு விற்பனை"

    • செல்போன் நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும்.
    • ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து விரிவான விளக்கத்தை வணிகவரித்துறையினர் வியாபாரிகளுக்கு நடத்த வேண்டும்.

    பல்லடம் : 

    திருப்பூர் மாவட்ட செல்லுலார் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதன் தலைவர் ஷேக் ஒளி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் பெரியசாமி, கார்த்திக், துணைச் செயலாளர்கள் கார்த்திக், ஆர்.கே. கார்த்திக், பொருளாளர் ரூபேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் லிங்குசாமி வரவேற்றார்.

    இதில் பல்லடம் செல்லுலார் சங்கத்தின் தலைவராக முருகன், செயலாளராக ராம்குமார், பொருளாளராக மாதேஷ், ஒருங்கிணைப்பாளராக சேரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    பின்னர் திருப்பூர் மாவட்டத்தில், சாலையோரங்களில் சிம் கார்டு விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து விரிவான விளக்கத்தை வணிகவரித்துறையினர் வியாபாரிகளுக்கு நடத்த வேண்டும்.

    செல்போன் நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட துணைப் பொருளாளர் சஞ்சய் குமார், ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்சாமி மற்றும் பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த செல்லுலார் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.
    • விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கோவை வணிக பொது மேலாளர் பால்வண்ணன் கூறியுள்ளதாவது:-

    திருப்பூர், கோவை வர்த்தக பகுதிகளில் சிம் கார்டு, ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்வதற்கு, நேரடி விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.டெலிகாம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எப்.எம்.சி.ஜி., (FMCG) எனும் வேகமாக விற்கக் கூடிய, நுகர்வோர் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.

    விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, http://www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 89034 18128 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    • மோசடியில் ஈடுபட்டனரா? போலீசார் விசாரணை
    • 44 சிம்கார்டுகள் பறிமுதல்

    வேலூர்:

    வேலுார் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு காந்திநகர் பகுதியில் வாகன பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக் ஒன்று வந்தது. அதில் முன்பக்கத்தில் மட்டும் பதிவெண் எழுதப்பட்டிருந்தது. பின் பக்கம் எழுதப்பட வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் வந்த 2 பேரை விசாரித்தனர்.அவர்கள் கொணவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) ஷேக் தஸ்தகீர் (21) என்பது தெரியவந்தது.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது 44 சிம் கார்டுகள் இருந்தன.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் அபர்ணா, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் விசாரணை நடத்தினர்.

    இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துள்ளனர். போலியான அடையாள அட்டை மூலம் சிம்கார்டு களை பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.

    முதல்கட்ட விசாரணையில், 'ஜெராக்ஸ் எடுக்கும் சில கடைகளில், இவர்கள் தொடர்பு வைத்துக் கொண்டு, அங்கு ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வருபவர்களுக்கு தெரியாமல், ஒரு ஜெராக்ஸ் அதிகப்படியாக எடுத்துக் கொண்டு, அதற்கு குறிப்பிட்ட பணம், அந்தக் கடைக்காரர்களுக்கு கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

    மேலும், இந்த ஆதார் கார்டில் வேறு போட்டோ ஒட்டி, அதன் மூலமாக 100க்கும் அதிகமான சிம்கார்டுகளை பெற்று, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    சைபர் கிரைம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×