search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை அமைக்கும் பணி"

    • வெள்ளகவி மலைப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த போதும் அக்கிராமத்திற்கு 400 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதி செய்யப்படவில்லை.
    • 400 ஆண்டுகளாக சாலைவசதி இல்லாத கிராமத்திற்கு தற்காலிக தீர்வாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கொடைக்கானல்:

    சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்கள் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் கண்டறியப்பட்டது.

    அவர்கள் கொடைக்கானலை சென்றடைய கும்பக்கரை அருவி வழியாக வெள்ளகவி ஊராட்சியை கடந்து வட்டக்கானல் வழியாக கொடைக்கானலை கண்டறிந்தனர்.

    கொடைக்கானலில் மிகப்பழமையான ஊராட்சி வெள்ள கவி ஆகும். ஆனால் பழமை வாய்ந்த இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த போதும் அக்கிராமத்திற்கு 400 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதி செய்யப்படவில்லை.

    இதனால் இப்பகுதி மக்கள் உங்கள் தொகுதியில் முதல்-அைமச்சர் பிரிவிற்கு தொடர்ந்து மனுக்கள் அளித்ததனர். இக்கிராம மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சுமார் 9 கி.மீ நடந்தே வந்து கொடைக்கானல் அல்லது பெரியகுளம் பகுதிகளில் தேவையான பொருள்களை வாங்கி தலைச் சுமையாக சுமந்து செல்வதும், விலை நிலங்களில் பயிரிட்ட பயிர் வகைகள், பழங்கள் ஆகியவற்றை தலைச்சுமையாக சுமந்து சென்று விற்று அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்.

    அதிக அளவு நோய்வாய்ப்பட்டவர்களை டோலி கட்டி சுமந்தே செல்வதும், மருத்துவமனையை சென்றடைவதற்கு முன்பாகவே பல உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகவே இருந்தன. பெண்கள் இதனால் அதிக அளவில் உயர் கல்வி கற்க இயலாமல் ஆரம்பக் கல்வியோடு வீட்டிலேயே முடங்கினர்.

    இதுகுறித்து பழனி எம்.எல்.ஏ செந்தில் குமாரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார் ஆகியோர் தொடர் நடவடிக்கைகள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தீவிர நடவடிக்கையின் காரணமாக, வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு முதல் கட்டமாக கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா மற்றும் ஒன்றிய குழு தலைவர் சுவேதா ராணி கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் சாலை அளவீடு செய்யும் பணியும் மண் சாலை அமைத்தல் பணியும் நடைபெற்று வருகிறது.

    வெள்ள கவி கிராமத்திற்கு மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றிதர வேண்டும் என இப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தபோதும் கடந்த 400 ஆண்டுகளாக சாலைவசதி இல்லாத கிராமத்திற்கு தற்காலிக தீர்வாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி
    • தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிைய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஏலகிரி ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், துணை தலைவர் நாகலிங்கம், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய தலைவர் முருகன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 20 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.
    • பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்.

    ஓசூர், 

    ஓசூர் மாநகராட்சிக்கு 38-வது வார்டுக்குப்பட்ட ஜீவா நகர் பகுதியில் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.

    இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் வெங்கட்ர மணப்பா, மண்டலத் தலைவர் ஜெயபிரகாஷ், கவுன்சிலர்கள் முரு கம்மாள் மதன், லட்சுமி ஹேமந்த்குமார், மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் ஊராட்சி பகுதிகளான பாம்பன்பட்டி முதல் சரவணபுரம் வரை உள்ள பழுதடைந்த சாலையை புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
    • பொய்யாமணி அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளையும் எம்எல்ஏ இரா மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி–களில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி ரூபாய் 41 லட்சத்தில் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் ஊராட்சி பகுதிகளான பாம்பன்பட்டி முதல் சரவணபுரம் வரை உள்ள பழுதடைந்த சாலையை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கும்,

    முதலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டி ஒத்தக்கடை முதல் பாரதி நகர் செல்லும் சாலை வரை சாலையை மேம்பாடு செய்யும் பணிக்கும் பூமி பூஜை நடந்தது. இதில் எம்எல்ஏ இரா.மாணிக்கம் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    மேலும் தோகைமலை, நாடக்காப்பட்டி, நச்சலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும், பொய்யாமணி அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளையும் எம்எல்ஏ இரா மாணிக்கம் தொடங்கி வைத்தார்.

    விழாவில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சிஒன்றிய குழு தலைவர் சுபத்ராதேவி ரவிராஜா, ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி–யன், குளித்தலை மெடிக்கல் மாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கருணாகரன், கள்ள பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 2 கிலோமீட்டர் தூரம் சாலை
    • ரூ.47 லட்சம் மதிப்பிலான சாலை பணிக்கு பூமிபூஜை

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் ராஜாவூரில் இருந்து ஏர்ராம்பட்டி வரை 2, கிலோமீட்டர் தூரம் தமிழக ஊரக சாலையை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.47 லட்சம் மதிப்பிலான சாலை பணியிற்கான பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கந்திலி ஒன்றிய குழு துணைத் தலைவர் மோகன் குமார் தலைமை வகித்தார், பூமி பூஜை போட்டு புதிய சாலை அமைக்கும் பணியை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம், கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் நந்தி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமாறன், முருகம்மா வேலு, ராணி சின்னக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர் ‌ திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் ஊராட்சி ரூ 6 லட்சம் மதிப்பிலான நெற்களம் பணியிற்கான பூமி பூஜையைஏ. நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

    இதில் கந்திலி ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, பள்ளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி சின்னக்கண்ணு, மற்றும் பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×